லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். ‘கூலி’ படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு தான், ‘கைதி 2’ இயக்கவுள்ளார். லோகேஷ் நடிக்கும் படத்த்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். தற்போது அருண் மாதேஸ்வரன் கதையை இறுதி செய்து, முதற்கட்டப் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்படத்துக்காக பல்வேறு...
ரஜினியின் ‘கூலி’ படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது முதலே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி...
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' . பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யாவழங்கும் இந்தப்...
பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகங்களைப் ஊக்குவிக்கும் அல்லது அமைதியாக இருக்கும் எந்தவொரு நபரும் உண்மையான தலைவர் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர் என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு: “உங்களுக்கு விஜய் பிடிக்குமா அல்லது அஜித் பிடிக்குமா என்று என்னிடம் சிலர் கேட்கின்றனர். நான் எப்போதும் சொல்வதைப் போல எனக்கு அஜித் பிடிக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர். மிக முக்கியமாக...
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மே 1-ல் வெளியாகும் இந்தப் படத்தின் ‘ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்’ சென்னையில்...
“பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும்” என்று பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார். டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு நேற்று (ஏப்.28) பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அஜித்குமார்...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. நடிகராகவும் இயக்குநராகவும் சசிகுமார் அறிமுகமான படம், ‘சுப்ரமணியபுரம்’. அவரே தயாரிக்கவும் செய்தார். கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் காலம் கடந்தும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக நிலைத்து விட்டது....
என் குடும்பத்தினர் எனக்கு தரும் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் மனைவி ஷாலினி நிறைய தியாகங்களை செய்திருக்கிறார் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்தார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித், “பட்டங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயருக்கு முன்னால் பட்டப் பெயர்கள் போடுவதை விட என்னை அஜித் அல்லது ஏகே என்றே அழைக்க விரும்புகிறேன். இதுவும் ஒரு தொழில் அவ்வளவுதான். நான் ஒரு நடிகன். என்னுடைய...
‘ரெட்ரோ’ படத்தின் தொடக்கத்தில் வரும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி தியேட்டரில் ஸ்பெஷல் தருணமாக இருக்கும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ'. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்....
‘தொட்டாங் சிணுங்கி’ இயக்குநர் கே.எஸ்.அதியமான் நீண்ட இடைவெளிக்குப் பிரகு மீண்டும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘தொட்டாங் சிணுங்கி’ படத்தின் மூலம் இயக்குநராக கொண்டாடப்பட்டவர் கே.எஸ்.அதியமான். அப்படத்துக்குப் பிறகு தமிழ், இந்தி படங்களை இயக்கினாலும் எதுவுமே பெரியளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் ஒன்றை இயக்கினார். அப்படமும் பாதியிலேயே நிற்கிறது. தற்போது புதிய படம் ஒன்றை சத்தமின்றி இயக்கி வருகிறார் அதியமான். சுரேஷ் காமாட்சி தயாரித்து...