Google search engine
பிரபல இந்தி மற்றும் மராத்தி பட நகைச்சுவை நடிகர் அதுல் பர்சுரே காலமானார். அவருக்கு வயது 57. நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர் இந்தியில், ஜிந்தகி 50 50, லவ் ரெசிபி, கட்டா மிட்டா, கல்கத்தா மெயில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் பங்கேற்று வந்த அவர், புகழ்பெற்ற சின்னத்திரை நிகழ்ச்சியான கபில் சர்மா காமெடி ஷோவிலும் பங்கேற்றிருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் அதுல் பர்சுரேவுக்கு...
போயபதி சீனு - பாலகிருஷ்ணா இணையும் ‘அகண்டா 2 - தாண்டவம்’ படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். போயபதி சீனு இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த படம் ‘அகண்டா’. இதில் ப்ரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். 2021-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இந்தப் படம் வெளியானது. 2021-ம் ஆண்டு அதிக வசூல் செய்த தெலுங்குப்...
சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியை (deleted scene) படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஜினி - ஃபஹத் பாசில் இடையிலான உரையாடலாக நீளும் அந்தக் காட்சியின் ஓரிடத்தில் ரஜினி, “பேட்ரிக் நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க” என ஃபஹத் பாசிலிடம் கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் ஃபஹத் பாசில், “உங்கள விடவா சார்” என கேட்கிறார். 31 நொடிகள் மட்டுமே உள்ள ஜாலியான இந்த...
சினிமாவுக்கு சிறு இடைவெளி விட திட்டமிட்டு இருக்கிறார் அஜித். அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ‘விடாமுயற்சி’ படத்துக்கு ஒரே ஒரு பாடல் மட்டும் பாக்கி இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு சுமார் ஒரு ஆண்டு சினிமாவுக்கு இடைவெளி விட இருக்கிறார் அஜித். இந்த...
சென்னை: தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரத்தன் டாடா என்னுடைய ஹீரோ. என் வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்த ஒருவர். தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. நவீன இந்தியாவில் அவர் பெயர் எப்போதும் நிலைத்திருக்கும்....
சென்னை: அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவரின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த புகைப்படங்கள் அதிகாரபூர்வமற்று இணையத்தில் பரவி வந்த நிலையில், தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்ந்திரன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்தது. அதில் முழுக்க வெள்ளை தாடி, வெள்ளை முடியுடன் இருந்தார் அஜித். கிட்டத்தட்ட அதன் இன்னொரு வெர்ஷனாக ‘விடாமுயற்சி’யிலும்...
சென்னை: வெற்றிமாறன் இயக்கி வரும் ‘விடுதலை 2’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா...
’ஜெய் பீம்’ படம் மூலம் தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் த.செ.ஞானவேலும், ‘ஜெயிலர்’ பெற்ற வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் இருந்த ரஜினியும் கைகோத்துள்ள படம்தான் ‘வேட்டையன்’. டீசர், ட்ரெய்லர் வெளியானபோதே என்கவுன்டரை நியாயப்படுத்தும் காட்சிகளுக்காக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கான விடை படத்தில் இருந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். தமிழகத்தின் பிரபலமான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்). ‘தாமதமான நீதி... மறுக்கப்பட்ட நீதி’...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், ரவுடி கும்பல் தலைவர் ஓம்பிரகாஷ். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவரை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். அவரின் கூட்டாளி சிஹாஸும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போலீஸாரின் விசாரணையில், ஓம்பிரகாஷை திரையுலகினர் உட்பட 20 பேர் ஓட்டலில் சென்று சந்தித்தது தெரிய வந்தது....
ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லர், ‘பிளாக்’. பொடென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கி இருக்கிறார். வரும் 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் புரமோஷனில் பரபரப்பாக இருக்கும் பிரியா பவானி சங்கரிடம் பேசினோம். “நிறைய த்ரில்லர் கதைகளைப் பார்த்திருப்போம். அதுல இருந்து வேறுபட்ட படமாக இது இருக்கும். இந்தப் படத்தை புது முயற்சின்னும் சொல்லலாம். ‘டிமான்ட்டி காலனி’ ஷூட்டிங்...