Google search engine
அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வந்தது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் கார் ரேஸ் பயிற்சிக்காக தனது குழுவுடன் ஸ்பெயின் நாட்டுக்கு அவர் செல்வார் என்று கூறப்பட்டது. அதன்படி அவர் இப்போது அங்கு சென்றுள்ளார். அங்குள்ள பார்சிலோனா எஃப் 1 கார் ரேஸ் தளத்தில், தனது பெயர் கொண்ட காருடன் அஜித்குமார் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளன. அடுத்த ஆண்டு துபாயில்...
ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், 'ஸ்வீட் ஹார்ட்'. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி படமான இதைத் தனது ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்...
புயல் எச்சரிக்கை காரணமாக சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரசு விடுத்துள்ள புயல்‌ எச்சரிக்கை காரணமாகவும்‌, மக்களின்‌ பாதுகாப்பை முன்னுரிமையாகக்‌ கொண்டும்‌, ‘மிஸ்‌ யூ’ திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்‌. புதிய வெளியீட்டுத்‌ தேதி விரைவில்‌ அறிவிக்கப்படும்‌. உங்களின்‌ புரிதலும்‌ ஆதரவும்‌ எப்போதும்‌ போல்‌ நிலைத்திருக்க வேண்டுகிறோம்‌. இந்த...
நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் ஷோபிதா துலிபாலாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் நடிகர் அகில் அக்கினேனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர் காதலித்து வந்த மும்பையை சேர்ந்த ஜைனப் ரவ்ஜீ-யுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். “அகிலின் நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதிலும் ஜைனபை எங்கள் குடும்பத்துக்கு வரவேற்பதிலும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சத்யதேவ், டாலி தனஞ்​செயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உட்பட பலர் இணைந்து நடித்​துள்ள படம், ‘ஜீப்​ரா’. பான் இந்தியா முறை​யில் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கி​யுள்​ளார். இந்தப் படத்​தின் வெற்றி​விழா சென்னை​யில் நடந்​தது. சத்யதேவ் உட்பட படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர். நடிகர் சத்யராஜ் பேசும்​போது, “நான் இந்தளவு வெற்றியை எதிர்​பார்த்து நடிக்க​வில்லை. ஒவ்வொரு நாளும் நல்ல விமர்​சனங்கள் வந்து​கொண்​டிருக்​கின்றன. சத்யதேவை தமிழுக்கு வரவேற்​கிறேன். அவர்...
“தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு” என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நடிகர் பார்த்திபன் இன்று (நவ.26) சந்தித்துப் பேசினார். அப்போது அவர் புதுச்சேரியில் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்து அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். புதுச்சேரி சுற்றுலா...
“மலையாள சினிமாவில் படப்பிடிப்பு முடிந்ததும் நீங்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழலால் எல்லை மீறல்கள் நடக்கிறது” என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார். கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் ‘சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்வில் நடிகை சுஹாசினி கலந்துகொண்டு பேசினார். அவர் கூறுகையில், “மற்ற துறைகளை காட்டிலும் வித்தியாசமானது சினிமா துறை. மற்ற துறைகளில் நீங்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்குச்...
வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி?: “நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு” என விஜய் சேதுபதியின் வசனத்துடன் தொடங்கிறது ட்ரெய்லர். டார்க்காக தொடங்கும் ட்ரெய்லர் அடுத்து காதலை நோக்கி பயணிக்கிறது. மஞ்சு வாரியர் கிராஃப் வெட்டிக்...
கடந்த 49 ஆண்டுகளாக காதணி விழா, திருமண விழா என அனைத்து விழாக்களிலும் இளையராஜா மட்டும்தான் நாயகனாக இருந்து கொண்டிருக்கிறார் என்று ’விடுதலை 2’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது ‘விடுதலை’ முதல் பாகம். இதன் நீட்சியாக இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, மஞ்சுவாரியர், கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன்,...
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, நடித்து ஹிட்டான படம், ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்த இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. டிச. 5-ல் வெளியாக இருக்கும் இதன் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ராஷ்மிகாவிடம், “உங்களின் வருங்கால கணவர் திரைத்துறையைச் சேர்ந்தவரா, வெளியிலிருந்து வரப் போகிறாரா?’ என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு ராஷ்மிகா,...