விரை​வில் தமிழ் கற்றுக் கொள்​வேன்: சத்யதேவ்

0
30

சத்யதேவ், டாலி தனஞ்​செயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உட்பட பலர் இணைந்து நடித்​துள்ள படம், ‘ஜீப்​ரா’. பான் இந்தியா முறை​யில் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கி​யுள்​ளார். இந்தப் படத்​தின் வெற்றி​விழா சென்னை​யில் நடந்​தது. சத்யதேவ் உட்பட படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

நடிகர் சத்யராஜ் பேசும்​போது, “நான் இந்தளவு வெற்றியை எதிர்​பார்த்து நடிக்க​வில்லை. ஒவ்வொரு நாளும் நல்ல விமர்​சனங்கள் வந்து​கொண்​டிருக்​கின்றன. சத்யதேவை தமிழுக்கு வரவேற்​கிறேன். அவர் தமிழ் கற்றுக்​கொள்​வ​தாகச் சொன்​னார். நான் 15 ஆண்டு​களாகத் தெலுங்​கில் நடிக்​கிறேன். இன்னும் தெலுங்கு கற்க​வில்லை. இதில் சத்யதேவ் என்னைத் தெலுங்​கில் டப் செய்ய வைத்து விட்​டார். இயக்​குநர் ஈஸ்வர் அற்புத​மாகப் படத்​தைத் தந்துள்ளார்” என்றார்.

சத்யதேவ் பேசும்​போது, “தமிழ்​நாட்டுடன் எனக்கு ஸ்பெஷல் தொடர்பு இருக்​கிறது. தமிழ்ப்​படங்​கள் எனக்​குப் பிடிக்​கும். தமிழில் நடிக்க வேண்​டும் என்று ஆசைப்​பட்​டேன். ‘ஜீப்ரா’ மூலம் அது நடந்​த​தில் மகிழ்ச்சி. இப்​படத்​துக்​கு கிடைத்​திருக்​கும் வர​வேற்பு மகிழ்ச்​சி​யைத் தந்​துள்ளது. ​விரை​வில் தமிழ்​ கற்​றுக் ​கொள்​வேன்​” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here