புயல் எச்சரிக்கை காரணமாக சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை காரணமாகவும், மக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டும், ‘மிஸ் யூ’ திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களின் புரிதலும் ஆதரவும் எப்போதும் போல் நிலைத்திருக்க வேண்டுகிறோம்.
இந்த சூழலில் எங்களுடன் துணை நிற்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, ஐங்கரன் இன்டர்நேஷனல், ஏசியன் சுரேஷ் எண்டெர்டைன்மெண்ட், ஸ்ரீ கற்பக விநாயக பிலிம் சர்க்யூட்ஹவுஸ் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் தொடர் ஆதரவை அளித்து வரும் மீடியா நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் அடுத்து இயக்கும் படம், ‘மிஸ் யூ’. இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். ஆஷிகா ரங்கநாத், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.