Google search engine
பிரபல இந்தி நடிகர் சயீப் அலி கான் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். கடந்த 16-ம் தேதி அதிகாலை, அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டார். வீட்டில் பணியாற்றியவர்கள் சயீப் அலி கானை மீட்டு, ஆட்டோவில் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய முதுகில் சிக்கி இருந்த 2.5 அங்குல நீளமுள்ள கத்தியின் உடைந்த பகுதி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது....
‘யாத்திசை’ படம் மூலம் கவனம் பெற்ற தரணி ராஜேந்திரன் அடுத்து இயக்கும் படத்தை ஜே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.கமலக்கண்ணன் தயாரிக்கிறார். ‘யாத்திசை’யில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சேயோன் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். பவானி ஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தப் படத்துக்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. சக்தி ஃபிலிம் பேக்டரியின் பி.சக்திவேலன், ஜி.தனஞ்செயன், சித்ரா லட்சுமணன்...
பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத் என பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சியில் மாளவிகா மோகனன் சமீபத்தில் நடித்துள்ளார். காய்கறி...
பிரபல இங்கிலாந்து நடிகை ஜுடி டென்ச் (Judi Dench). ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ‘எம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற இவர், ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’ (1998) படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர். மிசஸ் பிரவுண் (1997), ஐரிஸ் (2001), நோட்ஸ் ஆன் எ ஸ்கேண்டல் (2006), கோல்டன் ஐ (1995) உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். 91- வயதான இவர்,...
மலையாள நடிகையான அபர்ணா வினோத், தமிழில் விஜய்யின் ‘பைரவா’ படத்தில், கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்துள்ளார். பின் பரத் நடித்த ‘நடுவன்’ படத்தில் நாயகியாக நடித்தார். ரினில் ராஜ் என்பவரைக் காதலித்து வந்த இவர், கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 2 வருடம் முடிந்த நிலையில் தனது காதல் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ள அவர், “நீண்ட யோசனைக்குப் பிறகு நான்...
கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்து வெளியான படம், ‘மேக்ஸ்’. வி கிரியேஷன்ஸ் சார்​பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்தார். விஜய் கார்த்திகேயா இயக்கிய இந்தப் படம் கன்னடம், தமிழ், தெலுங்​கில் உருவானது. கன்னடத்​தில் வரவேற்​பைப் பெற்றுள்ள இந்தப் படத்​தின் அடுத்த பாகம் விரை​வில் உருவாக இருப்பதாகக் கூறப்படு​கிறது. இதுபற்றி இயக்​குநர் விஜய் கார்த்தி​கே​யா​விடம் கேட்​ட​போது, “இந்தப் படம் கன்னடத்​தில் பெரிய வெற்றி பெற்றுள்​ளது. இன்னும் அங்கு ஓடிக் கொண்டிருக்​கிறது. இந்தப்...
பிரபல யூடியூப்பரான ஹரி பாஸ்கர் நாயகனாக அறிமுகமாகும் படம், ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’. இதில், லாஸ்லியா, பிக் பாஸ் ரயான், ஷா ரா, சித்ரா லட்சுமணன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி, இன்வேட் மீடியா சார்பில் நிதின் மனோகர் தயாரித்துள்ள இதை பி.வாசுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். வரும் 24-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் செய்தியாளர்கள்...
அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜேபி இயக்கத்தில் உருவாகும் படம், ‘நிறம் மாறும் உலகில்’. இதில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மல்லிகா அர்ஜுன்- மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளனர். தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். “நான்கு விதமான வாழ்க்கை, 4 கதைகள், அதை இணைக்கும் ஒரு புள்ளி என நம் வாழ்வில், உறவுகளின் அவசியத்தை...
வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த தெலுங்கு நடிகர் விஜய ரங்கராஜு என்ற ராஜ்குமார், சென்னையில் காலமானார். தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘பைரவ தீபம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலின் ‘வியட்நாம் காலனி’ படத்தில் ராவுத்தர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மலையாளத்திலும் பிரபலமானார். தமிழ் சினிமாவிலும் நடித்துள்ள இவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சமீபத்தில் காயமடைந்தார். அதற்காகச் சென்னையில் தனியார்...
பிரபல இந்தி நடிகரான அமிதாப்பச்சன் மும்பை ஓஷிவாரா பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ரூ.31 கோடிக்கு வீடு வாங்கியிருந்தார். ஆறு கார் பார்க்கிங் வசதி கொண்ட அந்த பிரம்மாண்ட வீட்டை, நடிகை கீர்த்தி சனோனுக்கு மாதம் ரூ.10 லட்சம் வாடகைக்கு அமிதாப்பச்சன் கொடுத்திருந்தார். இப்போது அந்த வீட்டை ரூ.83 கோடிக்கு அவர் விற்றுள்ளார். இதற்கான முத்திரைத் தாள் கட்டணம் மட்டும் ரூ.4.98 கோடி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது