Google search engine
‘டிமான்டி காலனி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அஜய் ஞானமுத்து. தொடர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் நடித்த ‘இமைக்கா நொடிகள்’, விக்ரம் நடித்த ‘கோப்ரா’, அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி 2’ படங்களை இயக்கினார். இவருக்கும் ஷிமோனா ராஜ்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இவர்கள் திருமணம் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அன்று மாலை, நெம்மேலியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி...
ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’ திரைப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு இப்போது கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஹெரூர் வனப்பகுதியில் கடந்த 2 -ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிலையில்,...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் - சீசன் 8’ நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதில் மொத்தம் 24 பேர் கலந்து கொண்டனர். வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர்களின் வெளியேற்றங்கள் நடைபெற்றன. கடுமையான போட்டிகளுக்குப் பிறகு, முத்துக்குமரன், சவுந்தர்யா, பவித்ரா, விஷால், ரயான் ஆகியோர் ஃபைனலுக்கு தேர்வாகினர். விஜய் டிவி சேனல் தலைவர் ஆர். பாலச்சந்திரன் மற்றும் கிளஸ்டர் ஜியோ...
மலையாளத்தில் வெளியான கோதா, மின்னல் முரளி உட்பட சில படங்களை இயக்கிய பசில் ஜோசப், நடித்தும் வருகிறார். ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தில் இவர் நடிப்புப் பேசப்பட்டது. இந்நிலையில் இவர் அடுத்து இயக்கும் படத்தில் மோகன்லாலும் மம்மூட்டியும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “கொஞ்ச காலம் நடிப்பை விட்டுவிட்டு படம் இயக்க இருக்கிறேன். ஒன்று அல்லது இரண்டு படங்களுக்கான ஸ்கிரிப்ட் வேலைகள்...
நடிகை தேவயானி முதன்முறையாகத் தயாரித்து, இயக்கியுள்ள குறும்படம், ‘கைக்குட்டை ராணி’. இதற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவு செய்துள்ள இக்குறும்படத்துக்கு பி.லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார். நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன்.என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 20 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளைப் பேசுகிறது. தாயை இழந்த ஒரு பெண் குழந்தை, தந்தை வெளியூரில் பணிபுரியும் சூழலில் எத்தகைய சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்துகிறது....
நடிகர் சயிப் அலி கானை கத்தி​யால் குத்​தி​யவரை போலீ​ஸார் கைது செய்​துள்ளனர். பாலிவுட் நடிகரான சயிப் அலிகான் (54), மகாராஷ்டிர மாநிலம் மும்பை மேற்கு பாந்த்ரா பகுதி​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வருகிறார். 11-வது தளத்​தில் உள்ள அவரது வீட்​டில் கடந்த புதன்​கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்​து கத்தி​யால் 6 முறை நடிகர் சயிப் அலி கானை குத்​தினார். இதையடுத்து மும்பை லீலாவதி மருத்​துவ​மனை​யில் சேர்க்​கப்​பட்டு...
துபாயில் நடக்கும் ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் நடிகர் அஜித் தலைமை யிலான ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ பங்கேற்றுள்ளது. இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டபோது, அஜித் ஓட்டிய கார், விபத்தில் சிக்கியது. இந்நிலையில் ரேஸில் இருந்து அவர் விலகினார். ஆனால் அவர் அணி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில், அஜித்குமார் ரேஸிங் அணி 991 பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்து...
கிராமம் ஒன்றில் கேபிள் நெட்வொர்க் நடத்தும் மதகஜராஜா (விஷால்), தனது பள்ளி ஆசிரியர் மகள் திருமணத்துக்காக அவர் ஊருக்குச் செல்கிறார். அங்கு தனது நண்பர்களான கல்யாணசுந்தரம் (சந்தானம்), ரமேஷ் (சடகோபன் ரமேஷ்), சண்முகம் (நிதின் சத்யா) ஆகியோரை சந்திக்கிறார். அப்போதுதான் தனது நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பது தெரிய வருகிறது. அந்த பிரச்சினைகளைச் சகல வல்லமை கொண்ட மதகஜராஜா எப்படித் தீர்த்து வைக்கிறார் என்பதை எக்கச்சக்க...
கன்னியாகுமரியில் கிடைத்த வேலையைச் செய்துகொண்டு, தனது தங்கையுடன் (ரிதா) வசிக்கிறார் மாற்றுத் திறனாளி இளைஞனான கோட்டி (அருண் விஜய்). அவர் மீது, சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்யும் டீனாவுக்கு (ரோஷினி பிரகாஷ்) காதல். அதைச் சட்டை செய்யாத அவன், விளிம்பு நிலை மனிதர்களை யாராவது துன்புறுத்தினால் அவர்களை அடித்துத் துவைக்கும் காளையாகச் சீறுகிறான். அவனது கோபத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றில் காவலாளியாகச் சேர்க்கப்படுகிறான். அங்கே நடக்கும்...
ஜனவரி 14-ம் தேதி ரஜினி நடிக்கவுள்ள ‘ஜெயிலர் 2’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ‘கூலி’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனை ஜனவரி 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது மட்டுமன்றி அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகளிலும்...