பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவே, சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி முதல் மெஹந்தி, ஹல்தி உள்ளிட்ட சடங்குகள் சென்னையில் நடைபெறுகிறது. இருவரது திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர். இந்தப்...
பல்வேறு படங்கள் மூலம் அறியப்பட்ட துணை நடிகர் ஜெயசீலன் காலமானார். அவருக்கு வயது 40.
’தெறி’ படத்தில் விஜய்யுடன் குழந்தைகள் ரைம்ஸ் பாடச் சொல்லும் காட்சியில் தவறாக பாடி அடி வாங்கும் காட்சியில் நடித்தவர் ஜெயசீலன். அப்படத்தின் மூலம் அனைவராலும அறியப்பட்டவர். சில தினங்களாகவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மஞ்சள் காமாலை தீவிரமானதால் படுத்த படுக்கையாகவும் இருந்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த...
சிவகார்த்திகேயன் படத்தின் அறிவிப்புக்கு முன்னரே தலைப்பு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ‘பராசக்தி’ திரைப்படம்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் படமொன்று உருவாகி வருகிறது. இதன் தலைப்புடன் கூடிய அறிமுக டீஸர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இதன் தணிக்கை சான்றிதழ் மூலம் ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது உறுதியாகிவிட்டது.
’பராசக்தி’ தலைப்புக்கு சிவாஜி சமூகநலப் பேரவை கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “’பராசக்தி’...
திருமண போட்டோ எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம், ‘2கே லவ்ஸ்டோரி’. ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்.14-ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
படத்தை இயக்கியுள்ள சுசீந்திரன் கூறும்போது,...
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, பிசியாக இருக்கிறார். அவர் நடித்துள்ள இந்திப் படம், ‘ஜாவா’. வரலாற்றுக் கதையை கொண்ட இதில் விக்கி கவுசல் நாயகனாக நடித்துள்ளார். அக்ஷய் கன்னா, அசுதோஷ் ராணா, திவ்யா தத்தா என பலர் நடித்துள்ளனர்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவாகியுள்ள இந்தப் படத்தை லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா, மகாராணி யேசுபாயாக...
பிரபல இசை அமைப்பாளர் டி.இமானுக்கு நேற்று 42-வது பிறந்த நாள். அதை முன்னிட்டு, தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: என் பிறந்த நாளை முன்னிட்டு முழு உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறேன். என்னுடைய காலத்துக்குப் பிறகு எனது உடல் உறுப்புகள் யாருக்காவது பயன்படுவது போல இருந்தால், பயன்படுத்திக் கொள்ளலாம். யாரோ ஒருவரின் வாழ்க்கைக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை...
நடிகை கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி திரைப்படத்தை திரையிட இங்கிலாந்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சீக்கிய அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கடந்த 1975-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை மையமாக வைத்து ‘எமர்ஜென்சி’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இதன் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர்.
இந்தப் படம் சீக்கிய சமுதாயத்தினரை தவறாக சித்தரிப்பதாகவும், வரலாற்று...
வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்யும் ராதா மணி (குரு சோமசுந்தரம்), மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்), மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மது பழக்கம் கொண்ட ராதா மணி, ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகிறார். அவரை மீட்க அசோகன் (ஜான் விஜய்) நடத்தும் குடி மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார் அஞ்சலம். அங்கிருக்க முடியாமல் தவிக்கும் ராதா மணி, நண்பர்கள் சிலருடன் தப்பிக்கிறார். பிறகு அவருக்கு என்ன...
2023-ல் வெளியான ‘சப்த சாகரடாச்சே எல்லோ - சைட் ஏ’, ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் பி’ கன்னட மொழித் திரைப்படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் இயக்குநர் ஹேமந்த் ராவ் நேர்காணல் ஒன்றில், “குறிப்பிட்ட சில வகை திரைப்படங்களைப் பார்ப்பவருக்குத்தான் சினிமாவைப் பற்றித் தெரியும் என்கிற கருத்தும் கமர்சியல் படங்களைப் பார்ப்பவருக்கு சினிமாவைப் பற்றி தெரியாது என்கிற கருத்தும் பரவலாக உள்ளது.
பெரும்பாலும் நிறைய...
நடிகர் சல்மான்கானை தொடர்ந்து மேலும் பல பாலிவுட் பிரபலங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ராஜ்பால் யாதவுக்கு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி மின்னஞ்சல் ஒன்று வந்தது. இதனை, விஷ்ணு என்பவர் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக, அம்போலி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று, நடன கலைஞர் ரெமோ டி செளசா, காமெடி நடிகர் கபில் சர்மா, ஸ்டாண்டப் அப்...










