‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ முதல் தோற்றம் வெளியீடு!

0
330

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியாகி, மாபெரும் வெற்றி பெட்ரா படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது.

இதன் அடுத்த பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’, 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இதன் 3-ம் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்த ஆண்டு டிச.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. சாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

இந்தப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பட டிரெய்லரின் முதல் கிளிம்ப்ஸ், வரும் 25-ம் தேதி ‘தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்’ படத்துடன் வெளியாகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here