ரா.வெங்கட் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தகப்பன்’. இதில் நாயகியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் குமார் தயாரிக்கிறார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம், மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் படம் இது.
கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற நிலையில்,...
எம்.எஸ். பாஸ்கர் கதை நாயகனாக நடிக்கும் 'விடியும் காத்திரு' என்ற க்ரைம் த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோருடன் பணியாற்றிய ஆர்.அரவிந்த ராஜன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஃப்ரண்ட்ஸ் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் பி.எம்.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி, பேபி ஸ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் விசாரணைக்காகச்...
ஜீவா நடித்திருக்கும் ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு அடைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘கிடா’ படத்தை இயக்கிய ரா.வெங்கட் இயக்கத்தில், ஜீவா நடித்திருக்கும் படம், ‘தகப்பன்’. இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குச் சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் குமார் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு நிறைவு குறித்து ஜீவா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...
யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிளை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
‘கொஞ்சி கொஞ்சி’ எனத் தொடங்கும் பாடலை விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ளார், யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். மனதை வருடும் இசையுடன் தொடங்கும் பாடலில், யுவனின் குரல் ஒலிக்கத் தொடங்கியதும், அது நம் காதுகளையும் மனதையும் யுவனின் பழைய இசை உலகத்துக்குள் வழிநடத்தி செல்கிறது.
இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரனின் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தில்,...
நடிகர் விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்துக்கு ‘சிட்டி ஆஃப் கோல்டு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கும் இப்படத்தில், இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, தங்கம் கடத்தல் மற்றும் கோவை நகரை மையமாகக் கொண்ட குற்றப் பின்னணி சார்ந்த கதையை பேசுகிறது. யு1 ரெக்கார்ட்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ்...
கார்த்தி நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள வரும் ‘சர்தார் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. 2022-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘சர்தார்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த ஸ்பை த்ரில்லர் படம் வரும் 10 வெளியாகிறது.
ட்ரெய்லர் எப்படி? - ட்ரெய்லரின் தொடக்கத்தில், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதைத் தடுக்க ஒரு ரகசிய உளவு நடவடிக்கை தேவை என்றும் அதிகாரிகள் விவாதிக்கின்றனர். முந்தைய பாகத்தைப் போலவே...
மனித உறவுகளுக்கு நட்பு, காதல், குடும்பம் என ஏதோ ஒன்று அடிப்படையாக இருக்கலாம். தாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஒருவர் தன்னை நேசிக்க வேண்டும் என்ற ஏக்கம் பலருக்கு வாழ்நாளில் கிடைக்காமலே போய்விடக்கூடும். அந்த உணர்வைத் தேடி ஓடும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு, இயக்குநர் விஷ்ணு எடவன் உருவாக்கியுள்ள திரைப்படம்தான் ‘ஹாய்’.
நாயகன் மயில்சாமிக்கு (கவின்) காதல் தவிர வாழ்க்கையில் எல்லாமே இருக்கிறது. ஆனால், தொடர்ச்சியான காதல் நிராகரிப்புகளுக்குப்...
அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடித்துள்ள படம், ‘வேட்ட சாமி’. இதில் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பெராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பம்பர்’ படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கியுள்ள இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக் ஷன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஆர்.டி....
குரு சோமசுந்தரம், அனுமோள், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘பாரிஸ் கஃபே’. இப்படத்தைக் கண்மணி ரங்கநாதன் தயாரித்துள்ளார்.
சரஜ் சீலன் இயக்கியுள்ள இதில் நடித்தது பற்றி நடிகர் விஜய் விஷ்வா கூறியதாவது: இந்த படத்தில் அமெரிக்காவில் இருக்கும் கவின் என்கிற ஆய்வாளராக நடித்திருக்கிறேன். எனது தோழியின் தந்தையாக குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். இங்கு நடக்கும் ஒரு சம்பவத்துக்காக நான் அமெரிக்காவில் இருந்து வருகிறேன். பிறகு என்ன...
நடிகை சமந்தா நடித்த ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கில் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்ட அவர், தான் தாய்மை அடைந்திருப்பதை அண்மையில் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்திருந்த அவர், வெள்ளிக் கிழமை ரசிகர்களின் கேள்விகளுக்குத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிலளித்தார். பல ரசிகர்கள் அவர் தாய்மை அடைந்திருப்பது பற்றியே...









