ஹிப் ஹாப் ஆதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மீசைய முறுக்கு 2’. இதில், சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ள இப்படம் செப். 25-ல் வெளியாகிறது.
இப்படத்தில் இருந்து...
‘தர்மன்’ படம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும். ஜென்ஸி வைபில் ரஜினி இதில் இருப்பார் என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்மன்’. இந்தப் படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
இதனிடையே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நிகழ்ச்சி ஒன்றில் ‘தர்மன்’ படம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறுகையில், “தர்மனுக்கு அடுத்து சிலம்பரசனுடன் ஒரு படம் பண்ணுகிறேன்....
ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபாதர்' திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் டார்லிங் கிருஷ்ணா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘அட்ரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் ராஜ்மோகன் கூறியுள்ளதாவது: ‘ஃபாதர்’ ஒரு உணர்வுபூர்வமான பயணம். தந்தை –...
திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்து நாயகனாகவும் அறிமுகமாகும் புதுமுகத் திறமைகளின் வரிசையில் டி.அந்தோணி, தன்னுடைய குறும்படத்தையே ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்கிற தலைப்பில் உருவாக்கியிருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டில் படத்தின் கதை பற்றிக் கூறும்போது: “கொல்கத்தாவிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் மது என்கிற பெண்ணும் கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழும் பணக்கார இளைஞன் கார்த்திக்கும் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறார்கள்.
சந்திப்பின் முடிவில் மீண்டும் சந்திக்கவே கூடாது என்று சொல்லிச்...
ஜி.வி.பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கி இருக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இன்று வெளியிட்டார். ட்ரெய்லரின் தொடக்கத்தில் மலைக்காட்டின் உச்சியில், ‘அபோகலிப்டோ’ ஜோடி போல ஒரு தம்பதி காட்டப்படுகின்றனர்.
அடுத்து, நவநாகரிக உலகுக்குள் வரும் காட்சிகள், ஒரு வீட்டில் ஷேரிங்கில் வசிக்கும் மஹி - சிந்துவின்...
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
அதில் நடிகை பூர்ணா நடனம் ஆடியிருந்தார். இப்படத்துக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் 3-ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.
இதையொட்டி நடிகை ஸ்ரேயா, ரஜினியுடன் இருக்கும் புகைப் படத்தை சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, ‘ஹாப்பிடே’ என...
ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படம், ‘நிஞ்ஜா’. இதில் பிரார்த்தனா, ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்தி ரங்களில் நடிக்கின்றனர்.
முருகு இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக் ஷன்ஸ் சார்பில் எஸ்.சாய் தேவானந்த், கே.எஸ்.சினிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்துக்கு முதலில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க இருந்தார். இப்போது ஷான் ரோல்டன்...
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘அரசன்’. ‘வடசென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகும் இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்குச் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் வட சென்னை செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் சென்னை தரமணியில்...
நடிகை எமி ஜாக்சன், தமிழில், ‘மதராசப்பட்டினம்’, ‘தெறி’, ‘2.0’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள அவர், ‘சூப்பர்கேர்ள்’ என்ற ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறார். இவர் ஜார்ஜ் என்பவரை காதலித்தார்.
2019-ம் ஆண்டில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆண் குழந்தையும் பிறந்தது. சில காரணங்களால் 2021-ல் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து, ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்த எமி, 2024-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம்...
திரைப்பட படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் செப். 1 முதல் நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பெப்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
‘செப். 1 முதல் வெளியாகும் திரைப்படங்களை, 8 வாரம் கழித்துத் தான் ஓடிடி-யில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான், அந்த படங்களைத் திரையிட அனுமதிக்க முடியும்’ என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
இதைக் கண்டித்து...









