புதுக்கடை: பைக்குகள் மோதல் தொழிலாளி உயிரிழப்பு
முஞ்சிறை பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி விமல்ராஜ் (39), தனது 10 வயது மகன் லிசோஸுடன் ஹோட்டலில் உணவு வாங்கிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு (23) ஓட்டி வந்த பைக் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து திருவனந்தபுரத்தில் உள்ள...
நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் சேகரிப்பு.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகையின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைத் தவிர்க்கும் நோக்கில், நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 52 வார்டுகளிலும் 100 வாகனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பழைய பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் மூலம், பழைய...
துபாயில் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு
ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் நகரில், மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா சமாஜ் இன்டர்நேஷனல் (MASSI UAE) அமைப்பின் சார்பில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு, பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின்...
நாகர்கோவில்: 90 கிலோ எடை தூக்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்
நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாணவ மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 42 லட்சம் ரூபாய் செலவில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உடற்பயிற்சி கருவிகள், பழு தூக்கும் கருவிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மனோ...
குளச்சல்: பெண்ணை மிரட்டிய மீனவர் மீது வழக்கு
குளச்சல், மரமடி பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா (53), முற்போக்கு பெண்கள் கழக கன்னியாகுமரி மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். நேற்று, குளச்சலில் உள்ள அலுவலகத்தில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மீனவர் டல்லஸ் (58) என்பவர், முன்விரோதம் காரணமாக வெண்ணிலாவை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்....
குழித்துறை: பஸ்ஸில் மூதாட்டியின் 3 பவுன் நகை பறிப்பு
மார்த்தாண்டத்தில் இருந்து குழித்துறைக்கு நேற்று மாலை சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்த குழித்துறை பகுதியைச் சேர்ந்த பார்வதி (64) என்பவர், வாவுபலி பொருட்காட்சி திடல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின் திருடு போனது. இது குறித்து அவர் அளித்த புகாரின்...
கொல்லங்கோடு: அரசு அதிகாரி வீட்டில் திருடியவர் கைது
கேரள தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஜயகுமார் (71) என்பவரின் கொல்லங்கோடு வீட்டில் இருந்து 8 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. பெங்களூருவில் வசிக்கும் விஜயகுமார் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தபோது இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. கொல்லங்கோடு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து,...
குமரி: புலிகள் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்
கன்னியாகுமரி வன விலங்கு சரணாலயங்களான பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம், வேளிமலை, குலசேகரம், களியல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகள் வரும் 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் புலிகள், சிறுத்தை, புள்ளி மான் உள்ளிட்ட பல விலங்குகள் பற்றிய...
புலியூர்குறிச்சி: ஆற்றில் பாய்ந்த லோடு ஆட்டோ; வீடியோ வைரல்
தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ வள்ளியாற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் காயமடைந்தார். அப்போது காரில் சென்ற குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, காரை நிறுத்தி காயமடைந்த ஓட்டுநரை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆற்றில் பாய்ந்த ஆட்டோவின் சிசிடிவி...
கல்குளம்: 1200 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண் பிரைட் குழுவினர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிற்காமல் வேகமாகச் சென்ற டாட்டா சுமோ வாகனத்தை துரத்திச் சென்று இரணியல் அருகே வள்ளி ஆற்றுப்பாலம்...












