மார்த்தாண்டம்: மருத்துவமனைக்கு சென்ற இளம் பெண் மாயம்
மார்த்தாண்டம், கோதேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான டிரைவர் மணிகண்டன் என்பவரின் மகள் புவனேஸ்வரி (21) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் புவனேஸ்வரி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அவரது தந்தை மணிகண்டன் மார்த்தாண்டம்...
திருவட்டாறு: கோவிலில் சந்தன களப அபிஷேகம் துவங்கியது
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் தொடங்கி 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு நேற்று சுமார் 12 மணியளவில் ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு களப அபிஷேகம் நடைபெற்றது....
குமரி: செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மாயமான இளம்பெண்
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி சிக்கந்தர் பாதுஷாவின் 19 வயது மகள், 10-ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் அடிக்கடி செல்போனில் பேசியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில்...
குலசேகரம்: அலகில் நூல் சிக்கி உயிருக்கு போராடிய பறவை
குலசேகரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று, பாம்பு தாறா என்ற நீர் வாழ் பறவை ஒன்று அதன் அலகில் நூல் சிக்கியதால் பறக்க முடியாமல் சோர்வாக கிடந்தது. மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் எபனேசர் இதைக் கண்டு, நூலை அறுத்து அகற்றி, வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் பறவைக்கு முதலுதவி...
குழித்துறை: ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நடைபாதை பாலத்தில் தண்ணீர் பாயும் மடை பகுதியில் பிளாஸ்டிக் குப்பிகள் மற்றும் ஆகாயத்தாமரைச் செடிகள் தேங்கி, பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, குழித்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அப்பகுதியைச் சுத்தம் செய்து,...
கருங்கல்: மூதாட்டியை தாக்கி வீட்டை இடித்த கும்பல்
நடுத்தேரி பகுதியைச் சேர்ந்த 77 வயதான கனகம் என்பவரின் வீட்டை, சொத்து பிரச்சனை காரணமாக ஒரு கும்பல் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளியுள்ளது. தட்டிக் கேட்ட மூதாட்டியை தாக்கியதாகவும், கருங்கல் போலீசில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. காயமடைந்த மூதாட்டி குமரி...
குமரியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்.
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, திருவள்ளுவர் தினமான வருகிற 16-ந்தேதியும், குடியரசு தினமான வருகிற 26-ந் தேதியும் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் எப். எல். 2, எப். எல். 3, எப். எல். 3ஏ...
குளச்சல்: சிறுவன் ஓட்டிய பைக், பெண் மீது வழக்கு
குளச்சல், காந்தி சந்திப்பில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது பூர்த்தியாகாத பிளஸ் 2 மாணவர் ஒருவர் பைக் ஓட்டி வந்தார். அந்த பைக் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கு சொந்தமானது. இதையடுத்து, சிறுவனுக்கு பைக் ஓட்ட அனுமதி அளித்த...
தக்கலை: 2 ஆண்டுகள் தலை மறைவு வாலிபர் கைது
தக்கலை அருகே வாள்வச்சகோஷ்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (30) என்பவர் மீது 2021ல் தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2023 முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சுபினுக்கு மாஜிஸ்திரேட் கைது வாரண்ட் பிறப்பித்தார். நேற்று தக்கலை...
முஞ்சிறை: தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற பெண் கைது
புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் தலைமையில் நேற்று முஞ்சிறை அருகே அள்ளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரமணி என்பவர் நடத்தும் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை பொருட்கள் 30 பாக்கெட்டுகள் (450 கிராம்) கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்,...












