Google search engine

மார்த்தாண்டம்: மனைவியைக் கொன்ற கணவர் சிறையில் அடைப்பு

காஞ்சிரகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் குமார் (55) என்பவர், தனது மனைவி கஸ்தூரியை (50) வெட்டி கொலை செய்ததாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேளாங்கண்ணிக்கு தப்பிக்க முயன்றபோது நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஜஸ்டின் குமார் கைது செய்யப்பட்டார். திங்கள்கிழமை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற...

மார்த்தாண்டம்: தாயுமானவர் ரேஷன் விற்பனையாளர் மீது தாக்குதல்

மார்த்தாண்டம், நந்தன்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை ஊழியர் ஜெப ஜாஸ்பர், தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் விநியோகித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் வந்த இருவரால் தாக்கப்பட்டார். காயமடைந்த அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த...

குமரி: முதியவரை காப்பகத்தில் சேர்த்த சட்டப் பணிக்குழு

குழித்துறை பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி காணப்பட்ட முதியவரை, கன்னியாகுமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சுந்தரி அறிவுறுத்தலின் பேரில், இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள்,...

மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் நிரந்தர பேரிகார்டு

மார்த்தாண்டத்தில் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகை இருந்தும், அதிவேகத்தால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், மேம்பாலத்தின் இருபுறங்களிலும் நிரந்தர பேரிகார்டு நேற்று அமைக்கப்பட்டுள்ளது. இரவு வெளிச்சத்திலும்...

குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்

குமரி மாவட்டத்தில் இன்று 16ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் மக்களை சந்திக்கிறார். மருங்கூர், மண்டைக்காடு, புதுக்கடை பேரூராட்சிகள் மற்றும் ஆலங்கோடு, பிராகோடு, சாந்தபுரம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்காக முகாம்கள் நடைபெறுகின்றன. ராஜாவூர், மண்டைக்காடு, புதுக்கடை, ஆலங்கோடு, பிராகோடு, சாந்தபுரம்...

குமரி: கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. கேரளாவிற்கு கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இது...

பார்வதிபுரம் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

நாகர்கோவில் பார்வதிபுரம் அரசு பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 44 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மேரி...

கப்பியறை: அரசு சுகாதார நிலைய கட்டிடம் ; எம்எல்ஏ அடிக்கல்

கப்பியறை பேரூராட்சி, ஓலவிளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15வது நிதி ஆணைய சுகாதார மானிய திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் அமைக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கலந்து...

நித்திரவிளை:  பஸ்சுக்கு நின்ற மனைவியை தாக்கிய கணவர்

நித்திரவிளை அருகே சாத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெபின் தாஸ், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த தனது மனைவி நிஷாவை, நேற்று சாலையோரம் பேருந்து ஏறுவதற்காக நின்றிருந்தபோது தகாத வார்த்தைகள் பேசி அடித்து காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நித்திரவிளை...

மார்த்தாண்டம்:   பைக் மோதி மத போதகர் மனைவி படுகாயம்

மார்த்தாண்டத்தில் நேற்று மத போதகர் ஜெஸ்லின் ஜாய் (43) தனது மனைவி புனிஜோவுடன் (35) பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் புனிஜோ படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து...