Google search engine

இரணியல்: லாரி டிரைவர் கொலை.. மேலும் 2 பேர் கைது

பிரம்மபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணதாஸ் (36) கடந்த 31 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இரணியல் போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணதாஸின் மனைவி பவித்ராவுக்கும் (33) ரமேஷ் என்பவருக்கும் இடையிலான கள்ளத்தொடர்பே கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. இதனையடுத்து, பவித்ரா மற்றும் அவரது தாயார் முத்துலெட்சுமி...

மார்த்தாண்டம்: பிரபல கொள்ளையர்கள் 4 பேர் கைது

கடந்த 12 ஆம் தேதி நட்டாலம் பகுதியில் விஜின் என்பவரிடம் இருந்து செயின், மோதிரம், பிரேஸ்லெட் ஆகியவற்றை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை மார்த்தாண்டம் போலீசார் நேற்று வாகன சோதனையில் கைது செய்தனர். நிர்மல், பெண்டன் பின், காட்வின், பிரவின் ஆகியோரை விசாரித்ததில், அவர்கள் நட்டாலத்தில்...

குளச்சல்: தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம் அரசு பஸ் டிரைவர் கைது

குளச்சல் காமராஜர் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நரிக்குறவர் இன பெண்களின் ஆடைகளை நீக்கி சில்மிஷம் செய்யும் சிசிடிவி வீடியோ நேற்று வைரலானது. இது தொடர்பாக குளச்சல் போலீசார் நடத்திய விசாரணையில், சில்மிஷம் செய்த அரசு பேருந்து ஓட்டுநர், குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜவகர் என்பவரை...

கருங்கல்: பேரூராட்சி தலைவரை தாக்கிய போலீஸ் மீது புகார்

கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட செல்லங்கோணம் பகுதியில் 10 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்ததை அகற்ற மதுரை ஹைகோர்ட் உத்தரவின்படி பேரூராட்சி தலைவர் சிவராஜ், செயல் அலுவலர் சத்யதாஸ் முன்னிலையில் பணி நடைபெற்றது. அப்போது, குளச்சல் கடலோர பாதுகாப்பு படையில் போலீசாக பணியாற்றும் ஆல்பர்ட் அன்புராஜ் என்பவர் பேரூராட்சி...

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் மழைநீர் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் அதிகாரிகளுடன் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி...

குமரி: அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும், மே மாத விடுமுறையை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை...

உதயமார்த்தாண்டம்: அரசு பள்ளி கட்டிடம் எம்எல்ஏ திறப்பு

மிடாலம் ஊராட்சி, உதயமார்த்தாண்டம் அரசு தொடக்க பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள் நேற்று திறக்கப்பட்டன. எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் இந்த கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்...

இரணியல்: லாரி டிரைவர் கொலை மனைவி, மாமியார் கைது

தக்கலை பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணதாஸ் (36) கடந்த 1-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இரணியல் போலீசார் இது தொடர்பாக கிருஷ்ணதாஸின் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் முத்துலட்சுமி (60) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பவித்ரா ரமேஷ் என்பவருடன் உல்லாசமாக இருந்ததை கிருஷ்ணதாஸ் பார்த்ததால்...

குமரி: வீட்டை உடைத்து பெண் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த மேரி சந்திரிகா (39) என்பவரின் வீட்டில், சொத்து தகராறு காரணமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் சூசை அடிமை, அவரது மனைவி சபிதா, மகன் சுபின் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கதவை உடைத்து புகுந்து மேரி சந்திரிகாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்....

புதுக்கடை: திருமண மோசடி; இளம்பெண் மீது வழக்கு

ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சுஜின் (35), கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணைக் காதலித்து 2023-ல் திருமணம் செய்துகொண்டார். சுஜின் கத்தார் சென்ற நிலையில், பிளஸ்சி கடந்த 2 ஆண்டுகளில் அவரிடம் ரூ. 12 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அவருடன் சேர்ந்து வாழ...