குமரி: எல்லை பகுதியில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
கேரளாவில் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், தமிழக-கேரள எல்லையில் உள்ள பத்மநாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றங்களுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஏப்ரல்...
களியக்காவிளை: ரூ 1 லட்சம் பறக்கும் படை பறிமுதல்
குமரி கேரளா எல்லையான களியக்காவிளை செக்-போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் பைக்கில் கொண்டு சென்ற ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பத்மனாபபுரம் கோட்ட ஆய அலுவலர் இசபெல் வசந்தி ராணி மற்றும் அதிகாரிகள்,...
குமரி ஆட்சியர் அலுவலகம் வந்த தேர்தல் பொருட்கள்
தமிழ்நாட்டில் இம்மாதம் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மெழுகு, எழுது பொருட்கள், மை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வந்துள்ளன. இவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு பண்டல் போடும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், இவை அந்தந்த தொகுதிகளுக்கு...
மண்டைக்காடு: கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர் சுரேஷின் மகள், 19 வயது கல்லூரி மாணவி அசினா, கடந்த 28ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து அசினாவின் தாயார் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) அசினா தனது காதலன் ஷாஜனுடன்...
திருவட்டாறு: ஆதிகேசவப்பெருமாள் கோவில் பள்ளி வேட்டை
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 9-ம் நாள் திருவிழாவில், நேற்று இரவு கருடவாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசுவாமியும் எந்தவித வாத்தியக்கருவிகளும் இன்றி நிசப்தமாக தளியல் ஜடாதீஷ்வரர் கோவில் பகுதிக்கு வேட்டைக்கு எழுந்தருளும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. வேட்டை முடிந்து திரும்பும்போது பக்தர்கள் மலர்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள்...
களியக்காவிளை: மது கடத்திய ஆட்டோ ஓட்டுனர் கைது
களியக்காவிளை போலீசார் நேற்று பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தியபோது, ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 பாட்டில் மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார், கேரளா மாநிலம் பாறசாலை, இஞ்சி விளை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஷமீர் (39) என்பவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம்...
குமரி: 2 டன் ரேசன் அரிசியை போலீசார் காருடன் பறிமுதல்
களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் இருந்து 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, கடத்தல் காரையும், ரேசன் அரிசியையும் உணவு கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அரிசியை...
தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை திடீர் உயர்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று பூக்களின் விலை திடீரென்று உயர்ந்தது. நேற்று முன்தினம் 1250 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பிச்சிப்பூ நேற்று 2000 ரூபாயாகவும், 1100 ரூபாயாக இருந்த முல்லைப் பூ 1900 ரூபாயாகவும், 450 ரூபாயாக இருந்த மல்லி 150 ரூபாய்...
பைங்குளம்: ஊராட்சி பணியாளர்கள் வாக்குப்பதிவு பைக் பேரணி
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள 11 ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வை வலியுறுத்தி பைக் பேரணி இன்று 30-ம் தேதி கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து துவங்கியது. மாவட்ட கலெக்டர் அழகுமீனா கொடியசைத்து பேரணியை...
குமரி: பச்சிளங் குழந்தை கொலை.. நர்சிங் மாணவி, காதலன் கைது
குமரி மாவட்டம் பொற்றையடி பகுதியில் முட்புதரில் பிறந்து சில மணி நேரமான பச்சிளங் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. தென்தாமரைகுளம் போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ரெஜினா (20) மற்றும் அவரது காதலன் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும்...













