Google search engine

குளச்சல்: கடலோர நிர்வாகிகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை

குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், கன்னியாகுமரி மாவட்ட கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். மீனவ மக்களின் முன்னேற்றம் குறித்து மன்ற நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள்,...

வெள்ளிச்சந்தை: கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறித்த ரவுடி

வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த அஜித் என்ற கூலித்தொழிலாளியை, சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த அனித் என்பவர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 470 ரூபாய் பறித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணம் பறித்த அனித் மீது...

சாலையில் தடுப்பில் மோதி இளைஞர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லகுடிமுக்கில் வசிக்கும் சீனு (27) என்பவர், நேற்று இருசக்கர வாகனத்தில் குமாரபுரம் பட்டன்விளை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர தடுப்பில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் அவரது நெற்றிப் பகுதியில் பலத்த காயமடைந்த அவரை, தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக...

கிள்ளியூர்: தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு

கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் சபின், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி பொது மக்களுக்கு இடையூறாக ஊர்வலம் நடத்தியதாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் வேட்பாளர் சபின் மற்றும் 10 பெண்கள் உட்பட மொத்தம்...

பொதுமக்களுடன் கஞ்சி குடித்த திமுக வேட்பாளர்

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், புனித வெள்ளியை முன்னிட்டு நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கஞ்சியை அவர்களுடன் வரிசையில் நின்று வாங்கி அருந்தினார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விளவங்கோட்டில் பாஜக சார்பில் களமிறங்கும் விஜயதரணி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி நாகர்கோவில் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளச்சலில் டி.சிவக்குமார், பத்மநாபபுரத்தில் பி.ரமேஷ், விளவங்கோட்டில் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணியும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸில் இருந்தபோது தொடர்ச்சியாக மூன்று...

குமரி: 3 தொகுதியில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 3) வெளியாகியுள்ளது. அதன்படி குமரி மாவட்டம்  கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். அதே போல் விளவங்கோடு தொகுதியில் பிரவீனும் குளச்சல் தொகுதியில் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டும் போட்டியிடுகின்றனர்.

நெல்லை, குமரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வருகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) நெல்லைக்குச் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து காரில் நெல்லைக்கு வருகிறார். நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பின்னர் கன்னியாகுமரிக்குச் சென்று அங்கு சனிக்கிழமை காலை பொதுக்கூட்டத்தில்...

குளச்சல்: வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கடியப்பட்டிணம் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வாக்குச்சாவடிக்குள் சென்று வரவும், மின் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து...

திருவட்டாறு: ஆறாட்டுக்கு எழுந்தருளிய ஆதிகேசவப் பெருமாள்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான நேற்று மாலை, ஆதிகேசவப்பெருமாளும் கிருஷ்ணசாமியும் மூவாற்று முகத்தில் ஆறாட்டம் கண்டருளினர். துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செய்ய, திருவிதாங்கூர் ராஜ பிரதிநிதி முன் செல்ல, பக்தர்கள் புடைசூழ ஆற்றூர், தோட்டவாரம் வழியாக மூவாற்று முகத்தை அடைந்தனர். இரவு...