குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி நீக்கம்
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்த ஜோஸ்லால், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுகிறார். அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரின் மனுவை நிராகரிக்க தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளார். கட்சியின் ஒழுங்குமுறைக்கு எதிரானது எனக் கருதி, மாநில தலைமை ஜோஸ்லாலை அடிப்படை...
உதயநிதி ஸ்டாலின் நாளை குமரியில் பிரச்சாரம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (14) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காக அவர் பிரச்சாரம் செய்வார்.
தக்கலை: வாலிபரை வெட்டிய தந்தை , மகன் மீது வழக்கு
தக்கலை அருகே கேரளபுரம் பகுதியில் செல்போன் திருட்டு தகராறில் சங்கர் என்பவரை ஸ்ரீதரன் மற்றும் அவரது மகன் அர்ஜுன் வெட்டுக்கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில்,...
மார்த்தாண்டம்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்
நேற்று, உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த சபின் (30) தனது தாயார் லதாவுடன் பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து புதுக்கடை நோக்கி சென்றார். சூசைபுரம் பகுதியில் சென்றபோது, லதாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதால் பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு...
நாகர்கோவில்: ஜல்லிகள், எம். சாண்ட் விலை உயரும் அபாயம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதைத் தொடர்ந்து, மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் நுழைவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் நேற்று முதல் மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் வரவில்லை. இதன் விளைவாக, மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான ஜல்லி, எம்...
குளச்சல்: கடலில் ஒரு சிறுவன் மாயம்; 2 சிறுவர்கள் மீட்பு
குளச்சல் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் ரியோபின் ரிட்ஜோ (14) ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி மாயமானார். அவருடன் சென்ற மற்ற இரு நண்பர்கள் மீட்கப்பட்டனர். மாணவரை மீட்கும் பணியில் குளச்சல் போலீசார் மற்றும் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்....
குமரி: 7 நாட்களாக பிணவறையில் தொழிலாளி சடலம்
கீரிப்பாறை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர், கடந்த 4ம் தேதி ரப்பர் தோட்டத்தில் சடலமாக கிடந்தார். பேச்சிப்பாறை கிராம நிர்வாக அலுவலர் அனிஸின் புகாரின் பேரில், சுரேஷின் உடல் குமரி அரசு...
தக்கலை: பஸ்நிலைய விதியை மதிக்காத கேரளா அரசு பஸ்கள் – வீடியோ
தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையத்திற்குள் கேரளப் பேருந்துகள் நுழையாமல், முக்கிய சாலையில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, கேரளப் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்குளம்: பாறை உடைத்த வாகனங்கள் பறிமுதல் – வழக்கு பதிவு
புதுக்கடை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கீழ்குளம் பகுதியில் அனுமதி இன்றி பாறைகளை உடைத்தவர்களைப் பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். போலீசாரைக் கண்டதும் பாறை உடைத்தவர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் 2...
குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்
பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளிலும், 18 ஆம் தேதி குளச்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிகளிலும் பாரதிய...













