முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி மேல்பாலை பள்ளி வெற்றி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
இதில், ஆண்களுக்கான கைப்பந்து போட்டி நாகா்கோவில் எஸ். எல். பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. மாவட்ட...
பைக்கில் மோதி நிற்காமல் சென்ற கார்; 2 பேர் படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் பூபதி மகன் முபின் (24). கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரியை நுள்ளி விளை பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள்.
நேற்று (செப்.,11) சகோதரியை பார்ப்பதற்காக முபின் மற்றும் அவரது தம்பி உறவு முறையான 15 வயது...
60 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி பலி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளவிளை சர்ச் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 50), தொழிலாளி. இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாகவசித்துவருகிறார். நேற்று முன்தினம் (செப்.,10) இரவு மணிகண்டன் உழவர்கோணம் பகுதியில் உள்ள ஒரு குவாரியில் பழைய இரும்பு பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது நிலை...
கல்வித்தரத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது: மத்திய அமைச்சர் பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம்
கல்வித்தரத்தில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக, மத்திய கல்வி அமைச்சர் பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு பள்ளிகளின் கல்வித்திறனை மேம்படுத்த ரூ.1,086 கோடியில் 614 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.551.41 கோடியில் 28,794 பள்ளிகளில்...
நாகர்கோவிலில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.10) மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள், மேயர், அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும்...
3. 40 லட்சம் குழந்தைகள் பயன்: குமரி கலெக்டர் தகவல்
'நிறைந்தது மனம்' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பயனாளிகளை கலெக்டர் அழகு மீனா நேரில் சந்தித்து திட்டம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் 110-ன் விதிப்படி “ஊட்டச் சத்தை உறுதி செய்" எனும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு...
கிருஷ்ணன்கோவில் குளத்தை சுத்தப்படுத்த கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் பயன்படுத்து வருகின்றனர். இதனால் இந்தக் குளம் அசுத்தமடைந்து மோசமான நிலையில் தண்ணீர் பச்சை நிறத்திற்கு மாறி உள்ளது. குளத்தில் உள்ள தண்ணீரை...
குமரி பகவதி அம்மன் கோயிலில் ஓணம் திருவிழா
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஓணம் திருவிழா வரும் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. 1 ஆம் நாள் திருவிழாவான 14ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிற பட்டும், 15ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய வெண் பட்டும், 16ஆம்...
குமரி: ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொன்ற 4 பேருக்கு குண்டாஸ்
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் மரியடேவிட் (56) ஆட்டோ டிரைவர். கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி இரவு காப்புக் காடு சந்திப்பு பகுதியில் வைத்து ஐரேனிபுரம் பகுதி நிர்மல் (26) என்பவருக்கும் மரியடேவிட்டுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதுக்கடை...
குமரியில் மாற்றுதிறானாளி போல் நடிக்கும் யாசகர்
குமரி கடற்கரையில் மாற்றுதிறனாளியாக நடித்து யாசகம் பெற்ற நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் வாலிபர் ஒருவர் தனது இரு கைகளையும் இழந்த நிலையில் யாசகம் பெற்று கொண்டிருந்தார், அப்போது ஒரு நபர் அவருக்கு பணம் கொடுத்துவிட்டு சென்றார், பின்னர் ஊனம் என நினைத்த...












