ஓணம் பண்டிகை; தோவாளையில் பூக்களின் விலை உயர்வு
குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தையில் தினந்தோறும் பல டன் பூக்கள் விற்பனையாகிறது ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை யொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெறும். அந்த வகையில் நாளை (செப்.,15) ஓணம் பண்டிகை என்பதால் தோவாளையில் பூக்கள் விற்பனை...
அந்தரபுரம் சுடலை கோயிலில் ஆவணி சிறப்பு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் அந்தரபுரம் அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசுவாமி திருக்கோயில் சார்பில் ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நேற்று (செப்.,13) நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் சுடலைமாட சுவாமிக்கு அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தோவாளை ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு உறுப்பினர்...
குமரி மாவட்டத்தில் 1,300 ரேஷன் கார்டுகள் அச்சடிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக 5,964 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 4,180 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு, முடிக்கப்பட்டுள்ளது. இதில் 1,300 குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் இந்த பணி முடிவடையும். பின்னர்...
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமினை பார்வையிட்ட கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய பகுதி கோழிவிளை இலங்கைவாழ் தமிழர் மறுவாழ்வு முகாமினை குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேற்று (செப்.,13) பார்வையிட்டார்.
இம்முகாமில் 108 குடும்பங்களை சார்ந்த 333 நபர்கள் வசித்து வருகின்றனர். இம்முகாமில் வசிக்கும் 10 குடும்பங்களை சேர்ந்த...
தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன், தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வசந்தம் நகர் பகுதியில் உள்ள மதுபார் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் மேல பெருவிளை பகுதியை சேர்ந்த கார் டிரைவரான செல்வன் ஜெபராஜ் (வயது 29) வந்தார்.
அவர் ரவீந்திரனிடம் மது குடிக்க...
கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் பனிஷ் (வயது 35), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று அப்பகுதியில் பூஜைக்காக வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைக்கு பூஜை நடந்தது. பூஜை முடிந்து பிரசாதம் கொடுக்கும் போது ஒருவர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை பனிஷ் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் பனிசுக்கும்,...
பள்ளி ஊழியர் பணி இடை நீக்கம்; நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம்
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஒன்றில் தூத்தூரை சார்ந்த சகாயராணி என்பவர் அலுவலக பணியாளராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்தூர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு அதை வங்கி கணக்கு...
கள்ளசாராய ஊறல் கண்டுபிடிப்பு; வனத்துறை அதிரடி
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்துள்ள வெள்ளாம்பிகை மலை பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலகத்திற்க்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அழகிய பாண்டிய வனச்சரகர் கலையரசன் வனத்துறையினருடன்நேற்று (செப்.,12) சம்பந்தபட்ட இடத்திற்க்கு சென்று சோதனை செய்தார்கள்.
சோதனையில் வெள்ளாம்பி பகுதியை சேர்ந்த ராமர் காணி (49)...
புகையிலை விற்பனை செய்த வியாபாரி குண்டாஸில் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து குண்டச்சட்டத்தில் சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த நிலையில் பளுகல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணுமாமூடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரில் வியாபாரி விஜயன் என்பவரை...
காந்தி சிலை உடைப்பு: எம்எல்ஏ தலைமையில் காங்கிரசார் மறியல்
விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட மருதங்கோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 1995ஆம் ஆண்டு முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரதாஸ் என்பவரால் காந்தியடிகள் உருவ சிலை ஒன்று நிறுவப்பட்டது. இந்த சிலை மற்றும் அந்த சிலையை சுற்றி அமைக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர் போன்றவை சமூக விரோதிகளால் சமீபத்தில்...












