குமரி: டிச., 2-ல் முன்னாள் படை வீரர்கள் குறைதீர் முகாம்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர், அவரை சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 2.12.2024 காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில், குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவரைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்ட நாள்...
நாகர்கோவிலில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
நாகர்கோவில் ராமன்புதூர் தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ராஜம் (வயது 62). இவர் தனது வீட்டில் வாத்துக்களை வளர்த்து வருகிறார். இந்த வாத்துக்கள் அடிக்கடி பக்கத்து வீட்டான தொழிலாளி ஜார்ஜ் சுபாஷ்ராஜ் (41) என்பவர் வசிக்கும் வீட்டுக்குச் சென்று விடுமாம். ஆனால் வாத்துக்கள் வருவது அவருக்குப் பிடிக்கவில்லை.
இதனால் ராஜத்தை அவர்...
கருங்கல்: பெண் டாக்டர் திடீர் மாயம்
கருங்கல் அருகே ஆலன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ செல்வம் மகள் கரோனா (24) ஹோமியோபதி டாக்டர் படித்துள்ளார். இவர் வேலை தேடி வந்துள்ளார். சம்பவ தினம் வீட்டிலிருந்து வேலைக்காக வெளியே செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள்...
தூத்தூர்: மீனவ கிராமத்தில் 50 பேரை விரட்டி கடித்த வெறிநாய்
குமரி மாவட்டம் தூத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பூத்துறை மீனவ கிராமத்தில் நேற்று காலை முதல் வெறிநாய் ஒன்று அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை வீடுகளுக்குள் புகுந்தும் சாலைகளில் நடந்து செல்லும் போது விரட்டி விரட்டி கடித்து காயப்படுத்தி உள்ளது. இதில் பச்சிளம் குழந்தை உட்பட...
களியக்காவிளை: கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
களியக்காவிளை அருகே குந்நுவிளை என்ற பகுதியில் பத்திரேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் காணிக்கையாக பணம் போடுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் திருவிழா நிறைவடைந்த பின்பு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் ரூபாயை கோயில் பூஜை...
புதுக்கடை: 2, 275 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரி மாவட்டத்தில் படகுகளுக்கு அரசு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் கேரளாவுக்கு கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (27-ம் தேதி) மாலையில் புதுக்கடை அருகே உள்ள மராயபுரம் வழியாக மீன் வண்டியில் மண்ணெண்ணெய் கடத்தி செல்வதாக புதுக்கடை தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ்...
நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்
குடும்ப வன்முறை உட்பட பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை முடிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், மத்திய மாநில பெண்கள் ஆணையத்திற்கு அதிகாரமும் நிதியும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு நேற்று பெண்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பார்வதிபுரம், வெள்ளமடம், வடசேரி, கோட்டாறு, இடலாக்குடி, கரிய மாணிக்க புரம், ஆஸ்ரமம் சுசீந்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மழையின் காரணமாக நாகர்கோவிலில் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது. மழை பொதுமக்களிடையே...
இரணியல்: நாய் கடித்து இன்ஜினியர் உயிரிழப்பு
இரணியல் அருகே பரசேரி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மூத்த மகன் மனீஷ் (28). பி. இ பட்டதாரி. இவர் கடந்த சுமார் 40 நாட்களுக்கு முன்பு பைக்கில் நுள்ளிவிளை ஊராட்சி மணக்கரைக்கு சென்ற போது அவரை ஒரு தெரு...
குளச்சல்: பெண்ணின் 10 பவுன் செயின் பறிப்பு
குளச்சலை அடுத்த மண்டைக்காடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் மனைவி சாய்தா (45) அந்தப் பகுதி மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 8:30 மணி அளவில் சாய்தா அந்தப் பகுதியில் உள்ள தோழி ஒருவரைச் சந்திப்பதற்காக நடந்து சென்று...












