Google search engine

குமரி: வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி

குமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய்வசந்த் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2 வது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இன்று 24-ம் தேதி குமரி மேற்கு மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற...

திருவட்டாறு: பஸ் நிலையத்தில் கோவில் ஓவியம் நிறுத்தம்

திருவட்டாறில் ரூ.2.55 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு பஸ் நிலைய சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது. இதில் வயலில் நாற்று நடும் படம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போன்ற படங்கள் வரையப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த இரண்டு...

திருவட்டார்: வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுருளக்கோடு, அயக்கோடு, அருவிக்கரை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று (24.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, ஆய்வு மேற்கொண்டார். சுருளக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கூவக்காட்டுமலை குக்குகிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு தலா...

இரவிபுத்தன்துறை: கடல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம் இரவிபுத்தன்துறையில் நடந்தது. மத்திய கடல் மீன்வளம் ஆராய்ச்சி நிறுவனத்தின் கொச்சி தலைமை அதிகாரி முனைவர் ஷோபா தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்திற்கு குளச்சல் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜித் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். கிராமப்புற தொழில்நுட்ப வளர்ச்சி மையம் தலைவர் வின்சென்ட்...

திற்பரப்பு : பூட்டப்பட்டு கிடந்த புறக்காவல் நிலையம் திறப்பு

சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவிக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு பாதுகாப்புக்காக போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பணியில் இருந்த போலீசார் அருவி மற்றும் கோவில் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்ததால் குற்றச் செயல்கள் குறைந்தன. இந்த...

புதுக்கடை: தென்னையிலிருந்து தொழிலாளியை மீட்ட தீயணைப்பு துறை

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதி தேங்காய்பாறை விளையை சேர்ந்தவர் மோகன் தாஸ் (67). இவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளி. நேற்று வீட்டின் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியுள்ளார். அப்போது தென்னை மரக் கொண்டையில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதை பார்த்தவர்கள் அவரை மீட்க வருமாறு...

கிருஷ்ணாபுரம் குளக்கரை பகுதி மக்கள் குமரி ஆட்சியரிடம் மனு

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மகளிர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் தலைமையில் மாவட்ட தலைவர் தீபக் சாலமன் மற்றும் கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் ஏராளமானோர் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: - மருங்கூர் அருகே ராமநாதிச்சன்புதூர் ஊரின் நடுவே...

நாகர்கோவிலில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் நேற்று (ஜனவரி 23) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிட வேண்டும்...

மண்டைக்காடு: திருமண ஏக்கம்;ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

மண்டைக்காடு அருகே உள்ள பரப்பற்று பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கண்ணன் (38). ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் கண்ணனுக்கு மதுப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு திருமணம் நடக்காததால் கண்ணன் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.  இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று (ஜனவரி...

குமரி: பிரச்சனைக்குரிய பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்

கடையால் பேரூராட்சியில் ஆறு காணி, பத்து காணி போன்ற பகுதிகளில் ஏராளமான பன்றி பண்ணைகள் செயல்பட்டு வந்தன. இந்த பண்ணைகளுக்கு கேரளாவில் இருந்து உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் கொண்டுவரப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்த பண்ணைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள்...