பொதுமக்கள் 3 நாட்களாக போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டம் தீவிரமடைந்தது. நேற்று அமைச்சர் ராஜேஷ்குமார், டாஸ்மாக் கோட்ட மேலாளர் சரவணன், கிள்ளியூர் தாசில்தார் அஜிதா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடை நிரந்தரமாக மூடப்படும் என அமைச்சர் ராஜேஷ்குமார் உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.















