நித்திரவிளை: ஆம்புலன்ஸ் சேவை.. துவக்கி வைத்த எம் பி

நித்திரவிளை  சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் போது, போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாத காரணத்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க அந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர்...

களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு

நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மாலை 6.30 மணிக்கு அலங்காரம், பிரதோஷ...

கோதை கிராமம் காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோதைகிராமம் அருள்மிகு காசி விஸ்வநாதர் உடன் உரை விசாலாட்சி அம்பாள் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், களபம், மூலிகைச் சாறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது....

கடையால்: சாலையில் கிடந்த பர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு

கடையால் பேருராட்சி, கணபதிக்கல் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் மனைவி லீலா. இவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது லீலாவின் பர்ஸ் ஒன்று கீழே விழுந்தது. இதனை அறியாமல் இருவரும் சென்று விட்டனர். அந்த நேரம் அந்த வழியாக கடையால் பேரூராட்சியின் துணைத் தலைவி விஜி மெர்லின் என்பவர்...

இரணியல்: ஆட்டோ மோதி பெண் படுகாயம்

பார்வதிபுரம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி மனைவி பகவதி அம்மாள் (43). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில் மூத்த மகளை இரணியல் பகுதிக் கள்ளியங்காட்டில் திருமணம் செய்துகொடுத்துள்ளனர். நேற்று இரவு மூத்த மகளைப் பார்ப்பதற்காகப் பகவதி அம்மாள் கள்ளியங்காடு பகுதிக்குச் செல்லும் பஸ்ஸில் வந்தார்....

மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் தள்ளாடும் நிழற்குடை

குமரி மாவட்டத்தின் இரண்டாவது தலைநகராக திகழும் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியினை போக்கிடும் வகையில் இரண்டரை கி.மீ நீளம் கொண்ட மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2018ல் திறக்கப்பட்டது.  திருவனந்தபுரம் பகுதியில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் காந்தி மைதானம் சந்திப்பில் இம்மேம்பாலத்தில் நின்று செல்கின்றன. இதையொட்டி பயணிகள் நிற்பதற்கு என...

மார்த்தாண்டம்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

கிள்ளியூர், அடைகாக்குழி பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரது மகன் சுஜின்குமார் (31). இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மார்த்தாண்டம் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்...

மார்த்தாண்டம்: புகையிலை விற்ற பெண் கைது

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்று காலை அந்தப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சிதறால் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி எமிலி (47)...

புதுக்கடை: தேசிய திறனறி தேர்வில் அம்சி பள்ளி மாணவர்கள் வெற்றி

மத்திய அரசு தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு (என்.எம்.எம்.எஸ்) நடத்தி வருகிறது. இந்த தேர்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு பிளஸ் டூ வரை மாதம் தோறும் ஆயிரம்...

அருமனை: தொழிலாளியை  கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அருமனை, புதுக்குளவரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் ரவி (55). ரவி மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் புஷ்பராஜ் (34). தொழிலாளி. ரவி தனது வீட்டில் அடிக்கடி தனக்கு தானே சத்தம் போட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  இதனை புஷ்பராஜ் கண்டித்து...