குமரி: மதுக்கடையில் CM படம்: பாஜக மகளிரணி தலைவி மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டாறு ரயில்வே ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்த தமிழ்நாடு பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமா ரதி, மாநகராட்சி கவுன்சிலர் சுனில் குமார், பாஜக வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த ராணி, பொதுச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர்...
நாகர்கோவில்: பாஜகவினர் மீது திமுக நிர்வாகிகள் போலீசில் புகார்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவதூறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு மதுபான கடையில் அவருடைய புகைப்படத்தையும் திமுக இரு வண்ண கொடியையும் அரசு மதுபான கடையின் முன்பு தொங்கவிட்ட பாஜகவினரை கண்டித்து வடசேரி காவல் நிலையத்தில் நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த் மற்றும்...
வடசேரி அரசு பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி அரசு மேல் நிலைப்பள்ளி தமிழாசிரியர் சுரேஷ்குமார் 12ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரப்பரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி இன்று (மார்ச்18) அரசு பள்ளி முன்பு துண்டு பிரசுரங்களுடன் பா. ஜ. க மாநகராட்சி...
வெள்ளமடம் அருகே சகதியில் சிக்கிய மாடு மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று அங்கிருந்த பள்ளத்தில் தேங்கிய சகதியில் சிக்கி வெளியே வர முடியாமல் பரிதவித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே...
நாகர்கோவிலில் மதுக்கடைக்கு எதிராக பாஜக கையெழுத்து இயக்கம்
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி ஊழல் நடந்தி ருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த ஊழலை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா. ஜனதா கட்சியினரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில் குமரி மாவட்ட பா. ஜனதா சார்பில் டாஸ்மாக்...
குளச்சல்: குமரி மீனவர் ஆழ்கடலில் உயிரிழப்பு
குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மெல்கியாஸ் மகன் சுகின் (39). கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு ஷாலினி (36) என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. கடந்த 4-ம் தேதி சுகின் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சீஜூ பாலன் என்பவரின்...
நாகர்கோவிலில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சுமார் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடை கண்டித்து இன்று பாஜக நடத்தும் போராட்டத்திற்கு சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கைது செய்யப்பட்டார்.
இதனைக்...
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற போலீசார் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதாவது குமரி மாவட்டத்தில் போலீசார் நலச்சங்க அலுவலகம் அமைக்க இடம் தர வேண்டும்.
சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் போலீசாருக்கு வழங்குவதை போல்...
குமரி: ரெயிலில் கடத்த முயன்ற 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்டத்தில் இருந்தும், குமரி மாவட்டம் வழியாகவும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். முக்கியமாக வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களில் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி ரெயில்...
மணவாளக்குறிச்சி: ஆற்றில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிளிநோஸ் மகன் பனிஅடிமை (36). மீன்பிடித் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று அந்தப் பகுதியில் உள்ள வள்ளி ஆற்றின் படித்துறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் பனிஅடிமையை மீட்டு...













