கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று அங்கிருந்த பள்ளத்தில் தேங்கிய சகதியில் சிக்கி வெளியே வர முடியாமல் பரிதவித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அதிகாரி துரை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 15 நிமிடம் போராடி மாட்டை பத்திரமாக மீட்டனர்.