Google search engine

நாகர்கோவில்: தி. மு. க. ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் கூட்டம்

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அஜித்குமார், தெற்கு ஒன்றிய அமைப்பாளர் மதன்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மேயர் மகேஷ்...

குமரி: புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சியின் செயலாளர் எஸ். எம். அந்தோணி முத்து என்பவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: - கிறிஸ்தவர்கள் தங்களின் பண்டிகையில் புனிதமான நாளாக புனித வெள்ளிக்கிழமையை கடைபிடிக்கின்றனர். தமிழகத்தில் பல சூழ்நிலைகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்படுகின்றன. இதில்...

பேச்சிப்பாறை: வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்ட கலெக்டர்

பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மோதிரமலை, குற்றியாறு, மைலார், மணியங்குழி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: - பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மோதிரமலை - குற்றியாறு வனப்பகுதிக்குள் கி.மீ 0/4-ல் ஏற்கனவே அமைந்துள்ள தரைப்பாலம்...

தக்கலை: கோயிலில் குத்துவிளக்குகள் திருட்டு; ஓருவர் கைது

தக்கலை அருகே உள்ள பூக்கடையில் பெருவழிமுத்து சாஸ்திரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கமாக பூஜைகள் முடித்துவிட்டு நிர்வாகிகள் சென்றனர். நேற்று காலையில் கோயிலுக்கு வந்த போது, அங்கிருந்த இரண்டு குத்து விளக்குகள் மாயமாகி இருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர் சுவர்...

புதுக்கடை: கிராம காவல் கண்காணிப்பு குழு உருவாக்கம்

தமிழக அரசின் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி குமரியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு காவலரை நியமித்து கிராம காவல் கண்காணிப்பு குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த கிராம மக்களின் குற்றம் குறைகளை கேட்டறியும் நோக்கத்தில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.  ...

மார்த்தாண்டம்: வாகனம் மோதி பிளம்பர் படுகாயம்

மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் மகன் ரெஜி (38). இவர் பிளம்பராக வேலை செய்கிறார். சம்பவ தினம் ரெஜி காஞ்சிரக்கோடு பகுதியில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் ரெஜி மீது மோதியது. இதில் பலத்த காயம்...

மார்த்தாண்டம்: பைக் திருடிய 2 கேரளா வாலிபர்கள் கைது

குழித்துறை அருகே திருத்துவபுரம் ஆணைபுறக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜூ மகன் பைஜூ (21). சாப்ட்வேர் இன்ஜினியர். சம்பவத்தன்று இவர் தனது பைக்கை மார்த்தாண்டம் அருகே பம்பம் பகுதியில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து...

புதுக்கடை: ஓய்வு பெற்ற ஆசிரியரை தாக்கியவர் மீது வழக்கு

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் இக்னேசியஸ் (64). ஓய்வு பெற்ற ஆசிரியர். அதே பகுதியை சேர்ந்தவர் ஜாண் டேவிட் (44). மரம் ஏறும் கூலித் தொழிலாளி. நேற்று காலை ஜாண் இக்னேசியஸ் வேங்கோடு பகுதியில் உள்ள ஒரு ஆலய பகுதியில் செல்லும்போது, அங்கு வந்த...

நாகர்கோவில்: மருத்துவ கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சுமார் ரூ. 5 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ கட்டிடப் பணிகளை நேற்று (ஏப்ரல் 10) தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் தமிழ்நாட்டிலேயே ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு...

மணவாளக்குறிச்சி: 2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ரூபஸ் (44). மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி மேரி ஜெனிலா (36). இந்தத் தம்பதிக்கு 11, 7 வயதில் இரு மகள்கள் உள்ளனர். ரூபஸ் மீன்பிடித் தொழிலுக்காகக் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று விட்டார். சம்பவத்தினம் மேரி ஜெனிலா தனது...