தமிழக அரசின் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி குமரியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு காவலரை நியமித்து கிராம காவல் கண்காணிப்பு குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த கிராம மக்களின் குற்றம் குறைகளை கேட்டறியும் நோக்கத்தில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.
புதுக்கடை காவல் நிலையத்தில் காப்புக்காடு கிராமத்தில் புதுக்கடை காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திக் முன்னிலையில் இந்த குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் காவலர் சஜீவ் என்பவரை கிராம காவலராக நியமிக்கப்பட்டு, அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் குறைகள் கேட்டறியும் பணி துவங்கியது.