தக்கலை அருகே வீட்டின் முன் தொழிலதிபர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை

தக்கலை அருகே கல்லுவிளையை சேர்ந்த தொழிலதிபர் மரியஅருள் (50), வீட்டில் தனியாக வசித்து வந்தார். தக்கலை அருகே உள்ள கல்லுவிளையை சேர்ந்தவர் மரியஅருள் (வயது50), தொழிலதிபர். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. மனைவி சென்னையில் ஆசிரியையாகவும், மகன் அரசு வங்கியில்...

“தக்கலை அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்திய விவகாரம் – தலைமையாசிரியர் இடமாற்றம்”

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில், போட்டித் தேர்வு சிறப்பு வகுப்புக்கு வந்த சில மாணவிகள், மற்றவர்கள் சென்ற பின்னர் பள்ளி வளாகத்தில் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. மாணவியின் ஆண் நண்பர் மதுபாட்டில் மற்றும் உணவு வாங்கிக்...

2,700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

மார்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 2,700 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய்யை வழங்கல்துறை அதிகாரிகள்வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி வழியாக...

குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு, அவை உரியவர்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ. 46 லட்சம்...

கடன் கொடுப்பதாக கூறி பத்திரம் மோசடி: மூதாட்டிக்கு நேரில் ஆறுதல் கூறிய எஸ்.பி. ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மூதாட்டிக்கு கடன் கொடுப்பதாகக் கூறி, அவரது வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நீதி கேட்டு நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக வாசலில் காத்திருந்த மூதாட்டியை,...

விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும்...

ஆடி மாதத்தில் வீசும் பலத்த காற்று; குமரியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி மாதத்தையொட்டி பலத்த சூரைக்காற்று வீசி வருவதால் ஆரல்வாய்மொழி மற்றும் முப்பந்தல் பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது. வழக்கமான மாதங்களை விட காற்று தீவிரமாகவும், அதிக வேகமாகவும் வீசுவதால் 250 முதல் 750 கிலோ வாட் திறன் கொண்ட...

சுங்கச்சாவடியை சுற்றி 20 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கான ஆப்.. பலரும் அறியாத சூப்பர் திட்டம்

கன்னியாகுமரி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அடிக்கடி கடந்து செல்லும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு புதிய டிஜிட்டல் ஆப்பை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் மாதாந்திர உள்ளூர் பாஸ்களை...

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்

இன்றைய சுழலுக்கு ஏற்றவாறு புதிய வண்ண அலங்காரங்களுடன் கூடிய ஆடைகளை உற்பத்தி செய்ய நெசவாளர்கள் முன்வர வேண்டும்" என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டக் கைத்தறித் துறை சார்பில், 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (07.08.2026)...

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.12-ல் உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி, ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 22-ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட...