அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம்
admin - 0
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வைத்திருந்தது, சீன அதிகாரிகளை சந்தித்தது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
64 வயதான ஆஷ்லே டெல்லிஸ். மும்பையில் பிறந்தவர். இந்திய வம்சாவளியான அவர் அமெரிக்க ஆய்வாளர் மற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஆலோசகராக உள்ளார். அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஆஷ்லே டெல்லிஸ் (64). முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பதவிக்...
இஸ்ரேல்-காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹமாஸ் குழுவினர் நேற்று 8 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினருக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 13-ம் தேதி எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில்...
பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தெஹ்ரிக்-இ-தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அந்நாட்டு எல்லையில் பாகிஸ்தான் கடந்த வாரம் குண்டு வீசியது.
இதற்கு பதிலடியாக ஆப்கன் படையினர் நடத்திய தாக்குதலில் பாக். வீரர்கள் 58 பேர் இறந்தனர். இந்நிலையில், காந்தகார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கன் மக்கள் 12 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆப்கன் படைகள் நடத்திய பதில்...
மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது.
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடியிருப்பதாக வெனிசுலா அறிவித்துள்ளது. நார்வே...
காசாவில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி
admin - 0
காசாவில் நீண்ட நாட்களாக பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 738 நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து காசாவில்...
''ஓ மை காட். என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் ஒரு தனிநபர்தான். இது ஓர் இயக்கம். இது முழு சமூகத்தின் சாதனை'' என அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மரியா கொரினா மச்சாடோ தெரிவித்திருப்பது பலரையும் நெகழ்ச்சியடைச் செய்துள்ளது.
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “2025-ம் ஆண்டுக்கான...
அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு கிடைத்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக்.10) மரியா...
அமைதிக்காகப் போராடி வரும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு நோபல் பரிசு: யார் இவர்?
admin - 0
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவரை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்கிறது. இதர 5 பிரிவுகளின் நோபல் பரிசுக்கு உரியவர்களை ராயல் சுவிடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் தேர்வு செய்கிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு...
பிரதமர் மோடியுடன் போனில் பேச, காசா அமைதி ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கும் பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிறுத்தினார்.
இஸ்ரேல் - காசா அமைதி திட்டம் குறித்து 20 அம்ச கொள்கை திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்தார். இது தொடர்பாக எகிப்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி உயிரோடு இருக்கும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். இறந்த பிணைக் கைதிகளின் உடல்களும்...
ஹங்கேரிய எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்னாகோர்காய்க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காவதாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஹங்கேரியன் எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்னாகோர்காய் வென்றுள்ளார்.
இவர் ஹங்கேரியில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்தார். இவரது முதல் நாவல் ‘சாட்டன்டாங்கோ’ கடந்த 1985-ம் ஆண்டு வெளியானது. இவர் எழுதிய ‘ஸ்பேட்வொர்க் பார்...










