Google search engine
“ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து, இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இந்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை. இது நமது வெளிநாட்டுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. இந்தச் சூழலில் மவுனம் என்பது நடுநிலையல்ல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கொள்கை அளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டால், சர்வதேச நெறிமுறைகள் சீரழிவதை...
இந்திய பெருங்கடலில் இலங்கையின் கடற்பரப்பில் ஈரான் போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதில் நீரில் மூழ்கியது. இதில் 83 பேர் உயிரிழந்ததாக தகவல். மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் தற்போது இந்திய துணைக்கண்டத்துக்கு அருகே அரங்கேறி உள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஹெக்ஸத் உறுதி செய்துள்ளார். புதன்கிழமை அன்று சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழகி கப்பல் ஏவிய ‘டார்பிடோ’...
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால், அதன் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தன. பதில் தாக்குதலில் இறங்கிய ஈரான், அமெரிக்க ராணுவ முகாம்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது...
இலங்கை அருகே இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற ஈரான் போர்க்​கப்​பல் மீது அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​குதல் நடத்​தி​யது. அதில் இருந்த 87 வீரர்​கள் உயிரிழந்தனர். அவசர அழைப்பு விடுக்​கப்​பட்​ட​தால் மீட்பு பணியில் இலங்கை கடற்​படை மற்​றும் விமானப்​படை ஈடுபட்டுள்ளது. இந்தக் கப்​பல் இந்​தி​யா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்​டுப் பயிற்​சி​யில் பங்​கேற்​றது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்துக்கு மறுத்த ஈரான்...
வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறி​வைத்து கடந்த செவ்​வாய்க்​ கிழமை ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. அப்​போது குவைத் வான்​பரப்​பில் 3 அமெரிக்க எப்​-15 இ ஸ்டிரைக் ஈகிள்ஸ் விமானங்​கள் சுட்டு வீழ்த்தப்​பட்​டன. இவை குவைத்​தின் நிலத்​தில் இருந்து ஏவப்​படும் ஏவு​கணை​களால் தவறு​தலாக சுட்டு வீழ்த்​தப்​பட்​ட​தாக ஆரம்​பத்​தில் கூறப்​பட்​டது. ‘நட்பு நாடு​களுக்கு இடையி​லான சம்​பவம்' என கருதப்​படும் இது குறித்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், அமெரிக்க தயாரிப்​பான எப்​/ஏ-18 ஹார்​னெட்...
ஓமன் கடல் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஓமன் கடற்பகுதியில், தலைநகர் மஸ்கட்டில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்கேடி வியோம் என்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் படகு மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சரக்கு கப்பலின் இன்ஜின் அறையில் தீப்பற்றியதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். இதை ஓமனில் உள்ள இந்திய தூதரகம் உறுதி...
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகவும், இனி எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (மார்ச் 3) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானின் வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை  மற்றும் தலைமைத்துவம் அனைத்தும் இப்போது இல்லாமல் போய்விட்டன. இப்போது அவர்கள் எங்களுடன் பேச விரும்புகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், காலம் கடந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்....
ஈ​ரானில் பூமிக்கு அடி​யில் சுமார் 1,600 அடி ஆழத்​தில் செயல்​படும் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகளை குறி​ வைத்து அமெரிக்க விமானப் படை​யின் அதிநவீன பி-2 போர் விமானங்​கள் தீவிர தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. ஈரானின் பல்​வேறு பகு​தி​களில் பூமிக்கு அடி​யில் சுமார் 1,600 அடி ஆழத்​தில் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகள் செயல்​படு​கின்​றன. இவை ஏவு​கணை நகரங்​கள் என்று அழைக்​கப்​படு​கின்​றன. அமெரிக்​கா, இஸ்​ரேல் உளவுத் துறை​ தகவல்​களின்​படி ஈரான் தலைநகர் டெஹ்​ரான், கெர்​மன்...
கத்​தார் தலைநகர் தோஹா​வில் அமெரிக்​கா​வின் மிகப்​பெரிய விமானப் படைத் தளம் உள்​ளது. அங்கு 10,000-க்​கும் மேற்​பட்ட அமெரிக்க வீரர்​கள் முகாமிட்டு உள்​ளனர். நூற்​றுக்​கும் மேற்​பட்ட போர் விமானங்​கள் நிலைநிறுத்​தப்​பட்டு உள்​ளன. தோஹா விமானப் படைத்​தளத்​தில் இருந்து புறப்​படும் அமெரிக்க போர் விமானங்​கள், ஈரான் மீது குண்​டுமழை பொழிந்து வரு​கின்​றன. இந்த சூழலில் தோஹா விமானப் படைத் தளத்​தில் நிறு​வப்​பட்​டிருந்த அமெரிக்​கா​வின் ஏஎன்​/எப்​பிஎஸ்​-132 என்ற அதிநவீன ரேடாரை ஏவு​கணை தாக்​குதல் மூலம் அழித்​து​விட்​ட​தாக...
அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலிய படைகள் நடத்​திய தாக்​குதலில் கொல்​லப்​பட்ட பள்​ளி மாணவிகள் உட்பட 165 பேருக்​காக வரிசை​யாகத் தோண்​டப்​பட்​டுள்ள கல்லறைகளின் புகைப்​படத்தை ஈரான் அரசு வெளி​யிட்​டுள்​ளது. ஈரானின் மினாப் நகரில் உள்ள மிகப்பெரிய ராணுவ தளத்தை குறிவைத்து, கடந்த 28-ம் தேதி இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ராணுவ தளம் அருகே உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 165 பேர் உயிரிழந்தனர். ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ்...