சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 140.4 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 லட்சம் குறைவாகும். 2025-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாக மட்டுமே பதிவாகியுள்ளது.
இது முந்தைய 2024-ம் ஆண்டை விட 16.2 லட்சம் அதாவது 17 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து 2024-இல் பிறப்பு விகிதத்தில் தென்பட்ட சிறிய முன்னேற்றம் ஒரு நிலையான மாற்றம் அல்ல என்பது...
கிரீன்லாந்து, கனடா, வெனிசுலாவை அமெரிக்க பகுதிகளாக காட்டும் புதிய வரைபடம் – ட்ரம்ப் பகிர்வு
admin - 0
கிரீன்லாந்து, கனடா, வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் பகுதிகளைப் போல போல காட்டும் புதிய வரைபடம் ஒன்றை அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்வுப் புகைப்படத்தில் ஐரோப்பிய தலைவர்களும் இருப்பது போன்று வடிவமைத்துள்ளார். புதிய சர்ச்சைக்கு இது வழிவகுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில், அவரை அவரது அலுவலகத்தில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது போன்றும், அவர்களிடம்...
200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்பதால், இந்தியா உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ‘‘இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கு இன்னும் சில பணிகள் உள்ளன. ஆனால், நாங்கள் ஒரு வரலாற்றுச்...
ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின்உள்ளிட்ட மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்படும் மோதல்களுக்கு தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘போர்டு ஆப் பீஸ்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.
ஐ.நா. சபைக்கு போட்டியாக அவர் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில் சேர...
வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்டுள்ளார்.
உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து சென்றது. மேலும், அந்நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியாக விளங்கும்...
“கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் எனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக கிரீன்லாந்து உள்ளது. இந்நிலையில், ஆர்க்டிக் பகுதியில் அச்சுறுத்தலாக உள்ள சீனா, ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க, எங்களுக்கு கிரீன்லாந்து வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். மேலும், கிரீன்லாந்தில்...
தெற்கு ஸ்பெயினில் உள்ள அடாமுஸ் நகரத்துக்கு அருகே நேற்று (ஞாயிறு) மாலை இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 21 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இது நாட்டுக்கு ஆழ்ந்த வேதனை நிறைந்த இரவு...
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீட்புக் குழுக்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 8 உடல்களை மீட்டெடுத்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் 60-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று கராச்சி மேயர் முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் கடந்த சனிக்கிழமை ( ஜன.17) இரவு குல் பிளாசா என்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனை வணிக...
ஐ.நா. சபைக்கு மாற்றாக புதிய அமைப்பை தொடங்கிய ட்ரம்ப்: ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக அழைப்பு
admin - 0
ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர்...
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பலவும் மதம் சாராதவை என்றும், அதேநேரத்தில் மதம் சார்ந்த வன்முறைச் சம்பவங்களும் பதிவாகி உள்ளன என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்ததில் இருந்து அந்நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய அரசும் இது தொடர்பாக தனது கவலையை வங்கதேச...
