ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் அடிக்கடி பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று திடீரென நங்கர்ஹார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதலை நடத்தினர். இந்த பயங்கரத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள்...
மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஈரானின் பொருளாதார வீழ்ச்சி, மதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் போராட்டத்தை...
“இந்தியா, பாகிஸ்தானுக்கு 200% வரி விதிப்பேன் என கூறி போரை நிறுத்தினேன்” – ட்ரம்ப் புதிய ‘தகவல்’
admin - 0
“200 சதவீதம் வரி விதிக்கப்படும் எனச் சொல்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தினேன்” என்று வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய அமைப்பின் (போர்டு ஆஃப் பீஸ்) நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.
“இந்த நிகழ்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் பேசினேன். இதை கேட்டு அவர் உற்சாகம் அடைந்தார். அவர் இந்த நிகழ்வை காணொலியில் பார்த்திருப்பார். (இந்த அமைப்பில் இணையாத இந்தியா,...
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் 14 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம், பஜாவுர் மாவட்டத்தில், தீவிரவாதிகள் நேற்று முன்தினம் மாலை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு வாகனத்தை ஒரு சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள ஒரு கல்லூரியின் சுவரில் மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஒரு சிறுமி கொல்லப்பட்டதாக ராணுவம்...
அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நாடு முழுவதும் மிகப் பெரிய குடியேற்றத் தடுப்பு முகாம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ‘தி இன்டெர்செப்ட்’ என்ற ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. அதன்படி, தற்போது சுமார் 70,000 குடியேறிகள் சிறை முகாம்களில் உள்ளனர். இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ஆயிரக்கணக்கானவர்களை தங்க...
சீனாவோ, ரஷ்யாவோ அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்று புதின் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ல் சீனா ரகசிய அணு ஆயுத சோதனையை நடத்தியதாக சமீபத்தில் அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும், விரிவான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்துக்கு சீனாவும் ரஷ்யாவும் முன்வர வேண்டும் என்றும் அமெரிக்கா அழைப்பு விடுத்தது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனா ஏற்கெனவே மறுத்த நிலையில், தற்போது ரஷ்யாவும் மறுத்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய செய்தித்...
பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 17 வீரர்களை சிறைபிடித்துள்ளதாகவும், அவர்களில் 10 பேரை விடுவித்துவிட்டு, எஞ்சிய 7 பேரை விடுவிக்க கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒரு வாரம் காலக்கெடு விதித்துள்ளதாகவும் பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ.) நேற்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் ஊடகப் பிரிவான ‘ஹக்கல்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "சிறைபிடிக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரில் 10 பேர் பலூச் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அவர்கள் உள்ளூர் காவல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பதாலும்,...
“உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது” – அந்தோணியோ குத்தேரஸ்
admin - 0
உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணியோ குத்தேரஸ், ‘‘ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி, பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி என அனைத்து தலைப்புகள் தொடர்பான விவாதங்களிலும் மிக முக்கியமான தலைவராக இந்தியா மாறியுள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா...
வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான், அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார். அதிபர் முகம்மது ஷகாபுதின் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வங்கதேச நாடாளுமன்றத்துக்கு கடந்த 12-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 297 இடங்களில் 209 இடங்களை வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) கைப்பற்றியது. மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அதன் தலைவரான தாரிக் ரஹ்மான் கட்சியின்...
வங்கதேசத்தின் புதிய பிரதமராக பிஎன்பி கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் முகமது ஷகாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024-ல் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன்பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில் வங்கதேச நாடாளுமன்றத்துக்கு கடந்த 12-ம் தேதி பொதுத் தேர்தல்...










