ஈரான் போருக்கு கூடுதலாக 200 பில்லியன் டாலர் (ரூ.18 லட்சம் கோடி) தேவை என அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் போர்தொடுத்தன. இதற்காக மிகப் பெரிய படையை அமெரிக்கா அனுப்பியது. ஈரான் மீதான தாக்குதல் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. ஈரானில் ஏராளமான இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க ராணுவத் தலைமையகம் ஈரான்...
நியூயார்க்கிலுள்ள ஒரு சிறை வளாகத்தில் கத்திகள், செல்போன், ஹேர்கிளிப்புகளை ட்ரோன் வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மார்சி டவுன் பகுதியில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலை வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நுழைந்த ஒரு ட்ரோன் கத்திகள், செல்போன், ஹேர்கிளிப்புகள், தலையில் அணியும் துணி ஆகியவை அடங்கிய பையை வீசிச் சென்றுவிட்டது.
இதைப் பார்த்த சிறை அதிகாரிகள் செல்போன், ஹேர்கிளிப்புகள் அடங்கிய பையை எடுத்து சோதனை செய்தனர்....
எண்ணெய் வயல்கள், காஸ் நிலையங்கள் மீது தாக்குதல்: ஈரானின் பதிலடியும், ட்ரம்ப் கொந்தளிப்பும்
admin - 0
கத்தாரைத் தாக்கினால் ஈரான் பேரழிவைச் சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதனால் போர் உச்ச கட்டத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு ராணுவ மோதலாக...
ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
“ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. அதை...
அமெரிக்க ராணுவ தளத்தில் பறந்த மர்ம ட்ரோன்களால் பதற்றம்: பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களை இடமாற்றம் செய்ய முடிவு
admin - 0
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ராணுவ தளத்தின் மீது மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம் எழுந்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசிக்கும் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் போர்ட் லெஸ்லி ஜே. மெக்நேயர் என்ற ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த மையம் அமெரிக்காவின் முக்கிய ஆயுதக் கிடங்குகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவு அமைச்சர்...
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்ரெசா சுலைமானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான்.
செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப்...
வட கொரிய தேர்தலும், ‘வசமான’ 99.93% வாக்குகளும் – கிம் ஜோன் உன் வெற்றிக் ‘கதை’யின் சுவாரஸ்ய பின்னணி
admin - 0
வட கொரியாவை இந்த பூவுலகின் மர்ம தேசம் என்று சொல்லலாம். அங்கு என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது என்று எல்லாமே வெளியுலகுக்கு ரகசியம்தான். உலகமே கோவிட் பெருந்தொற்றில் சிக்கி மரணக் கணக்குகளை சொல்லிக் கொண்டிருந்தபோதும் கூட, உயிரிழப்புகள் பற்றி அங்கிருந்து ஒற்றைச் செய்திகூட பதிவாகவில்லை. ராணுவ கட்டுக்கோப்பு என்பதன் உண்மையான அடையாளமே வட கொரியாதான் எனலாம். அந்த அளவுக்கு மக்கள் ‘உம்’ என்றாலும், ‘இம்’ என்றாலும்...
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள், கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதிகள் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 900-க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள கட்டிடம்...
ஈரான் போர் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவேன் அசார் தெரிவித்துள்ளார். ஈரானின் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் ரூவேன் அசார் இதை கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
இது தொடர்பாக முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரூவேன் அசார் கூறியதாவது: “ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் அது அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக ஈரானின்...










