ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 12-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, 11-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவை எதிர்த்து விளையாடினார். இதில் அரினா சபலென்கா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - சண்டிகர் இடையிலான ஆட்டம் நேற்று சேலத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவரில் 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
18 வயதான ஆந்த்ரே சித்தார்த் 143 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசினார். இது அவருக்கு முதல் சதமாக அமைந்தது. நாராயண் ஜெகதீசன் 63, முகமது அலி 40,...
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி, இந்தோனேஷியாவின் அட்னான் மவுலானா, இன்தா கஹ்யா சாரி ஜமீல் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 21-18,...
துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (841) 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா (837) 3-வது இடத்திலும் உள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நோமன் அலி 761 புள்ளிகளுடன் 2...
புதுடெல்லி: ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி வரும் பிப்ரவரி 11 முதல் 16 வரை சீனாவில் உள்ள கிங்டாவோ நகரில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகளை இந்திய பாட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2023-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.
இந்திய அணிகள் விவரம்: ஆடவர்: லக்சயா சென், ஹெச்.எஸ்.பிரனாய், சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி, துருவ் கபிலா,...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்த கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையை, ரசிகர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன்படி போட்டியை காண்பதற்கு டிக்கெட் வைத்திருப்பவர்கள் அனைவரும் போட்டியின் தினத்தில் மெட்ரோ ரயில்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
admin - 0
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜன்னிக் சின்னர், பென் ஷெல்டன், இகா ஸ்வியாடெக், மேடிசன் கீஸ் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 8-ம் நிலை...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஐசிசி ஆடைக் கட்டுப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கும்: பிசிசிஐ செயலாளார்
admin - 0
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஐசிசி-யின் ஆடை கட்டுப்பாட்டை இந்தியா கடைபிடிக்கும் என பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களை கருதி பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய மறுப்பு தெரித்ததால், இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் அணியும் சீறுடையில், தொடரை நடத்தும்...
டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் வரும் மார்ச் 25 முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.2.38 கோடியாகும். 25 மற்றும் 26-ம் தேதிகளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து பிரதான சுற்று 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் இந்தத் தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் போராடி தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10-வது நாளான நேற்று கால் இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி...










