காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார் ஸ்ரேயஸ் ஐயர், அப்போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை நீண்ட தூரம் பின்னோக்கி ஓடிச் சென்று பிடித்து, அலெக்ஸ் கேரியை அவுட்டாக்கினார் ஸ்ரேயஸ்.
பந்தை பிடித்த...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏனெனில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய காகிசோ ரபாடா,செனுரன் முத்துசாமியுடன் இணைந்து 98 ரன்கள் குவித்து அசத்தினார்.
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. டிரிஸ்டன்...
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி, இந்திய ராணுவத்தில் நயிப் சுபேதாராக இணைந்தார். இதன் பின்னர்...
குளிர்கால ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள மிலன், கார்டினா டி’ஆம்பெசோ நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியை இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா ஏந்திச் செல்லவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அபிநவ் பிந்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “மிலன், கார்டினா நகரங்களில் நடைபெறும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டத்தில்...
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும்...
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. இந்நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி என்பதை பார்ப்போம்.
லீக் சுற்றில் இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளை பெற்றுள்ளது. முதல் சுற்றில் இன்னும் 2 ஆட்டங்களில் இந்தியா விளையாட வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை...
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியை நியமித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை நீக்கிவிட்டு அஃப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஸ்வான் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
அடுத்த மாதம் உள்நாட்டில்...
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (அக்.20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் போட்டி மழையால் முழுதும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தவறாக முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். இங்கிலாந்து போட்டு சாத்து சாத்து என்று சாத்தி எடுத்து 20...
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு(ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் அண்மையில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் குல்தீப் யாதவ் முன்னேற்றம் கண்டுள்ளார்.
அவர் 689 புள்ளிகளுடன் 21-வது இடத்திலிருந்து 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஐசிசி...









