யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173*, சாய் சுதர்சன் 87 ரன் விளாசல்: முதல் நாளில் இந்திய அணி 318 ரன் குவிப்பு
admin - 0
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய சாய் சுதர்சன் அரை சதம் அடித்தார்.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு...
கிரிக்கெட்டில் சில சமயம் எல்பிடபிள்யூ விஷயத்தில் களத்தில் இருந்த நடுவர் ஏற்கெனவே முடிவு எடுத்திருப்பார். ஆனால் டிஆர்எஸ் முறையில் வேறு மாதிரியான முடிவு வருவது போன்று தெரிந்தாலும் போதுமான ஆதாரங்களுடன் நடுவர் எடுத்த முடிவு தவறு என நிரூபிக்க முடியாத சூழ்நிலை வந்தால் அது அம்பர்யர்ஸ் கால் என்ற முடிவுக்கு வருவார்கள்.
களத்தில் உள்ள நடுவர் எடுத்த முடிவை டிஆர்எஸ் முறையில் மாற்ற வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய...
உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது.
இதில் கலப்பு அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்திய அணி நேற்று நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 35-45, 21-45 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது.
புரோ கபடி லீக் 12-வது சீசனின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புரோ கபடி லீக் தொடரின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் நேற்றுடன் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடைசிகட்ட லீக் போட்டிகள் இன்று (11-ம் தேதி) முதல் வரும் 23-ம் தேதி வரை டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே...
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140...
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதுகு வலி காயத்தில் இருந்து அவர், இன்னும் முழுமையாக குணமடையாததே...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற 2 லீக் ஆட்டங்களிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோரிடமிருந்து...
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா விலகியிருக்கலாம், ஆனால் அவரது வசீகரமும் நகைச்சுவை உணர்வும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பங்கேற்ற ரோஹித் சர்மா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
நிகழ்ச்சியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியாவின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் அருகில் அமர்ந்திருந்தார் ரோஹித் சர்மா....
கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் வெள்ளை நிற உடைகளில்தான் வீரர்கள் விளையாடினார்கள். ஆனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் வண்ண சீருடைகளில் விளையாடுகிறார்கள். இந்த மாற்றத்துக்கு பின்னர் பெரிய கதையும், போராட்டமும் உள்ளது. 1970-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சி பெட்டி (டி.வி) கருப்பு வெள்ளையில் இருந்து வண்ண நிறத்துக்கு மாறியது. அப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மீடியா நிறுவனரான கெர்ரி பேக்கர் சேனல் 9 என்ற சேனல் நடத்தி வந்தார்.
அவர்,...
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வரும்...









