எனது கடின உழைப்பு, தீவிர பயிற்சியே வெற்றிக்குக் காரணம் என்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்தார்.
ஐபிஎல் சீசனின் தொடக்க ஆட்டம் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி கண்டது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பெங்களூரு...
நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று (மார்ச் 30) முதல் லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்நிலையில், தங்கள் அணியை கேப்டனாக வழிநடத்த ரியான் பராக் சரியான தேர்வு என ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன், இந்த சீசனுக்கு முன்னதாக டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்றார். இந்த சூழலில் அணியின்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இம்முறை அனுபவம் இல்லாத ரியான் பராக் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த சீசனிலும் பெரும்பாலான போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக இருந்தார். அந்த சீசனில் ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில் இறுதி ஓவர்களில் தோல்வியை சந்தித்து இருந்தது.
இது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை வெகுவாக பாதித்தது. இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட ரியான் பராக் முயற்சி செய்யக்கூடும். ரவீந்திர ஜடேஜா, டொனோவன் பெரைரா...
மார்ச் 27, 2016, டி20 உலகக் கோப்பைத் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் கிளாசிக் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்ப இந்திய அணி அரையிறுதியில் நுழைந்தது. இன்றைய தினத்தில் அந்த கோலி கிளாசிக் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது.
இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஏரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ்...
பாகிஸ்தான் சூப்பர் லீக் என்றாலே சர்ச்சைகளின் லீக் என்றாகிவிட்டது. நேற்று முதல் போட்டியிலேயே வெள்ளைப்பந்து பிங்க் நிறப் பந்தாக மாறிய விவகாரம் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
லாகூர் குவாலாண்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிகள் மோதிய போட்டியில், சாதாரணமாக வெள்ளையாக இருக்கும் கிரிக்கெட் பந்து, ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே பிங்க் நிறமாக மாறிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்ததோடு ஆஸ்திரேலிய பேட்டர் மார்னஸ் லபுஷேனுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அணிக்காக விளையாடிய...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 19-வது சீசன் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, தலா...
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இணைந்து மொத்தம் 13 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளன. இருப்பினும், கடந்த சீசன் இந்த அணிகளுக்கு கடும் போராட்டமாகவே அமைந்தது.
கடந்த முறை பிளே-ஆஃப் சுற்று வரை மும்பை அணி சென்றாலும், அவர்களின் முழுத் திறனும் வெளிப்படவில்லை. 5 முறை சாம்பியன் என்ற அடிப்படையில் இம்முறை மும்பை அணி கம்பீரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.
கடந்த...
ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சமீபத்தில் சாதனை தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் வணிகத்தில் ‘முதலீட்டுக் குமிழி’ எனும் அபாயம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
‘இன்வெஸ்ட்மெண்ட் பபுள்’ அல்லது ‘முதலீட்டுக் குமிழி’ என்பது பொருளாதார நிபுணர்களால் அபாயகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு இரு பேருதாரணங்களாக அவர்கள் சுட்டிக்காட்டுவது அமெரிக்க 1929 பங்குச் சந்தை சரிவு அதன் பிறகான தி கிரேட் டிப்ரஷன் என்பதற்கு பிரதான...
3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) கடந்த சீசனில் 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களின் காயம் அணிக்கு பெரிய அளவில் பின்னடவை ஏற்படுத்தக்கூடும்.
இருப்பினும், பலரும் கவனிக்கத் தவறிய ஒரு விஷயம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் பட்டத்தை வென்ற அதே அணியின் முக்கிய வீரர்கள் இப்போதும் அணியில் நீடிக்கின்றனர். அதோடு, கடந்த ஆண்டு அணியில் இல்லாத...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 21 முதல் 25 வரை நாக்பூரில் நடைபெறுகிறது.
2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், 3-வது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் பிப்ரவரி 11 முதல் 15 வரையிலும், 4-வது...










