மீண்டு வரும் முனைப்பில் கேகேஆர் | ஐபிஎல் 2026 விரைவுப் பார்வை

0
127

3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) கடந்த சீசனில் 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களின் காயம் அணிக்கு பெரிய அளவில் பின்னடவை ஏற்படுத்தக்கூடும்.

இருப்பினும், பலரும் கவனிக்கத் தவறிய ஒரு விஷயம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் பட்டத்தை வென்ற அதே அணியின் முக்கிய வீரர்கள் இப்போதும் அணியில் நீடிக்கின்றனர். அதோடு, கடந்த ஆண்டு அணியில் இல்லாத சில அதிரடியான வெளிநாட்டு வீரர்களையும் இந்த முறை சேர்த்துள்ளனர்.

பலம்: கேப்டன் அஜிங்க்ய ரஹானேவின் அனுபவம். நியூஸிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன்களான ஃபின் ஆலன், டிம் ஷெய்பர்ட் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனின் வருகை. அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங்கின் தாக்குதல் ஆட்டம். உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சு தாக்குதல் (சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி) வலுவான ஆல்ரவுண்டர்கள் (கேமரூன் கிரீன், சுனில் நரேன், ரச்சின் ரவீந்திரா). ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப வெளிநாட்டு வீரர்களை மாற்றியமைக்கும் வசதி.

பலவீனம்: ஹர்ஷித் ராணா, ஆகாஷ்தீப் காயம் காரணமாக விலகல். மதீஷா பதிரனா இன்னும் உடற்தகுதியை எட்டவில்லை. சுழற்பந்து வீச்சை மட்டுமே அணி நம்பி உள்ளது. இது சொந்த மண்ணில் பலமாகத் தெரிந்தாலும், மற்ற மைதானங்களில் விளையாடும்போது சவால்களை சந்திக்க நேரிடும். வீரர்களின் பேட்டிங் வரிசை நிலையற்றதாக உள்ளது.

அணி விவரம்

பேட்ஸ்மேன்கள்: அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், டிம் ஷெய்பர்ட், ரிங்கு சிங், தேஜஸ்வி தஹியா, மணீஷ் பாண்டே, ரோவ்மன் பவல், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், சர்தக் ரஞ்ஜன், ராகுல் திரிபாதி. ஆல்ரவுண்டர்கள்: கேமரூன் கிரீன், சுனில் நரேன், ரச்சின் ரவீந்திரா, அனுகுல் ராய், தக் ஷ் கர்மா.

பந்துவீச்சாளர்கள்: வைபவ் அரோரா, சவுரப் துபே, கார்த்திக் தியாகி, பிளெஸ்ஸிங் முசாரபானி, மதீஷா பதிரனா, நவ்தீப் சைனி, பிரசாந்த் சோலங்கி, உம்ரன் மாலிக், வருண் சக்ரவர்த்தி.

செயல் திறன்

சாம்பியன் பட்டம்: 3 – 2012, 2014, 2024

மொத்த ஆட்டங்கள்: 251 வெற்றி: 130 தோல்வி: 115 முடிவு இல்லாதவை: 6

வெற்றி சதவீதம்: 52%

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here