மீண்டும் சதத்தை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி: ராஜஸ்தான் 214 ரன்கள் குவிப்பு – IPL Qualifier 2
admin - 0
நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 96 ரன்கள் எடுத்தார் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்த ஆட்டத்தில் ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இந்த ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்போர் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி...
சுப்மன் கில் அதிரடி சதம்: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்
admin - 0
ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. அணியின்இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி...
நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதிச் சுற்று தேர்வு முகாமில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இருக்கும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு முகாம்கள் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து...
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கா ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
சிங்கப்பூரில் சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் கால் இறுதியில் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி 19-21, 21-17, 21-3 என்ற செட் கணக்கில் மலேசியாவின் காங்...
நார்வே செஸ் போட்டியின் 4-வது சுற்றில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் இந்திய வீரரும் உலக சாம்பியனுமான டி.குகேஷ் தோல்வி கண்டார்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனும், நடப்பு உலக சாம்பியனும் இந்திய வீரருமான டி. குகேஷும் மோதினர். குகேஷ் வெள்ளை நிறக்காய்களுடனும், மேக்னஸ் கார்ல்சன் கருப்பு...
“வைபவ் சூர்யவன்ஷியை விரைந்து வெளியேற்ற முயற்சிப்போம்” – குஜராத் பயிற்சியாளர் பார்த்தீவ் படேல்
admin - 0
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை விரைந்து வெளியேற்ற முயற்சிப்போம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்த ஆட்டம் நாளை (மே 29) நியூ சண்டிகரில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுகின்ற அணி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில்...
நார்வே செஸ் போட்டி அந்நாட்டின் ஒஸ்லோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதினார். இந்த ஆட்டம் 31-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதையடுத்து நடைபெற்ற ஆர்மகெடான் சுற்றில் அலிரேசா ஃபிரோஸ்ஜா வெற்றி பெற்றார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இதில் 46-வது நகர்த்தலின்...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி சுற்று 2 ஆட்டத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த அணியின் வெற்றியில் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில், 12 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசி முக்கிய பங்கு வகித்தார்.
இந்த ஆட்டத்தின் போது அதிவேக ஐபிஎல் சதம் அடிக்கும் சாதனையை...
இறுதிப் போட்டியில் கால் பதிக்குமா ராஜஸ்தான்? – தகுதி சுற்று 2-ல் இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல்
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூசண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி சுற்று 1-ல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியிடம் 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. அந்த ஆட்டத்தில் கேப்டனாக ஷுப்மன் கில்லின் பல்வேறு...
அடுத்த மாதம் தொடங்கும் ஃபிபா உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை மெஸ்ஸி கேப்டனாக வழிநடத்துடுகிறார்.
வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்த தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில்...










