பொங்கல் பண்டிகையையொட்டி, வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜன.28-ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜன.18-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இதை நீட்டிக்கக் கோரி, சென்னை தலைமைச் செயலகத்துக்கு...
“அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட முதியவர்களின் முகாம் ஆகிறதா தவெக?” புலனாய்வு பத்திரிகை ஒன்றில் வாசகர் ஒருவர் இப்படியான கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார். உண்மையில் தவெக-வை கட்டமைக்க விஜய்க்கு துணையாக வந்தவர்கள் இப்படியான முகாமைத்தான் இப்போது அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விசிக-விலிருந்து ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சிக்கு வந்தபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால், மிகக் குறுகிய காலத்திலேயே விசிக-வுக்கு வித்தியாசமான முகத்தைக் கொடுத்தவர் ஆதவ். ஆனால், விசிக-வில் இருந்த விசாலமான சுதந்திரம்...
கிடா விருந்து… கிரிக்கெட்டுக்கு ஸ்பான்சர்! – நாமக்கல் சீட்டுக்கு முட்டி மோதும் அதிமுக தலைகள்
admin - 0
தேர்தலில் சீட் பிடிக்க பலரும் பலவிதமான உத்திகளை கையில் எடுப்பார்கள். நாமக்கல் அதிமுக-வில், சீட் பிடிப்பதற்காக வாரம் தோறும் கட்சியினருக்கு கறி விருந்து ‘கவனிப்பு’களை நடத்தியும் யார் கேட்டாலும் கோயிலுக்கு நன்கொடைகளை வாரி வழங்கியும் இரண்டு பேர் பணத்தை இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளுக்கும் சேர்த்து அதிமுக-வில் விருப்ப மனு அளித்த 151 பேர் நேர்காணலில் பங்கேற்றார்கள். இதில், நாமக்கல் தொகுதிக்கு மட்டும் 27...
காணும் பொங்கல் பாதுகாப்புப் பணியில் சென்னையில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மெரினாவில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக காணும் பொங்கல் வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் கடற்கரை, பூங்கா உட்பட பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்வது வழக்கம்.
மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க காவல்...
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் நேற்று 18-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கடந்த 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி நீண்ட...
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நிலவும் கடும் குளிரால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இயல்புக்கு மாறான வானிலை காரணமாக கடும் குளிர் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக சென்னை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் ஸ்வெட்டர், மஃப்ளர் சகிதமாக காலை, மாலை வேளைகளில் வலம் வருகின்றனர்.
விடுமுறை தினத்தில்கூட குழந்தைகள்...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் கடந்த 9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்வார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.
சென்னையிலிருந்து மதுரை, கோவை,...
நம் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை மறக்க கூடாது – வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு துணை முதல்வர் அழைப்பு
admin - 0
நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது என்று அயலகத் தமிழர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் “தமிழால் இணைவோம் - தரணியில் உயர்வோம்” என்ற தலைப்பில் 2 நாள் நடைபெறும் அயலகத் தமிழர் தினம்-2026 விழா சென்னையில் நேற்று தொடங்கியது.
இணையவழியில் நடத்திய பேச்சு, ஒப்புவித்தல், மாறுவேடம், கதை சொல்லுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 பேருக்கு...
பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இரண்டு நாட்களில் 2.47 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
2,092 பேருந்துகள் இயக்கம்: அந்த வகையில் கடந்த ஜன.9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தினமும் 2,092 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கடந்த 9-ம் தேதி கூடுதலாக...
மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இரட்டை வேடம்: திமுக அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
admin - 0
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2019-ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு கோரி போராடிய போது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசாணை 354-ன் படி உரிய ஊதியம் வழங்கப்படும் என்று மருத்துவர்களிடம் அவர் சத்தியம் செய்தார். ஆனால்...
