Google search engine
வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு குறித்து துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வேதனை தெரிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையேயான பனிப்போர் அண்மையில் மூத்த நிர்வாகிகள் மத்தியில் முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் அது தொடர்ந் ததாகவே தெரிகிறது. இது பொதுச்செயலாளர் வரை மீண்டும் சென்ற நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி...
சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், சிங்கப்பெருமாள்கோவில் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 12 மின்சார ரயில்களின் சேவையில் இன்று (11-ம் தேதி) மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படும். காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு இன்று...
தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: ஜூலை மாதத்​துக்​கான மாதாந்​திர பொது​விநி​யோகத் திட்ட மக்​கள் குறைதீர் முகாம், சென்​னை​யில் உள்ள உணவுப் பொருள் வழங்​கல் மற்​றும் நுகர்​வோர் பாது​காப்​புத் துறை​யின் 19 மண்டல உதவி ஆணை​யாளர் அலு​வல​கங்​களில் நாளை (ஜூலை 12) காலை 10 முதல் பிற்​பகல் 1 மணி வரை நடை​பெறவுள்​ளது. குடும்ப அட்​டைகளில் பெயர் சேர்த்​தல், பெயர் நீக்​கல், முகவரி மாற்​றம், கைப்​பேசி எண் பதிவு அல்​லது மாற்​றம்...
 தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்திய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை அதன் நிர்வாக குழு சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, 2025 மே மாதம் தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்த...
கம்​யூனிஸ்ட் கட்​சியை பற்றி பேச பழனி​சாமிக்கு தகுதி இல்லை என்று இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் முத்​தரசன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, கோவை மாவட்​டம் வடவள்​ளி​யில் மேற்​கொண்ட பிரச்​சா​ரத்​தின்​போது, “தமிழகத்​தில் கம்​யூனிஸ்ட் கட்சி இருக்​கிற​தா, இல்​லையா என்ற முகவரியே இல்​லை’’ என்று விமர்​சித்​தார். இதற்கு கண்​டனம் தெரி​வித்து இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் வெளி​யிட்ட அறிக்​கை​: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, சொந்​த​மாக...
அ​தி​முகவை தோழமை கட்​சி​யாக கரு​தியே அவர்​களது கூட்​டணி குறித்து விமர்​சிக்​கிறேன் என்று விசிக தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அதி​முக கூட்​ட​ணி​யில் இருந்து நான் வெளி​யேறியபோது, ‘‘தம்பி திருமாவளவன் எங்​கிருந்​தா​லும் வாழ்​க’’ என முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா என்னை வாழ்த்​தி​னார். அவருக்கு தம்​பி​யாக களத்​தில் நான் பணி​யாற்​றியது அதி​முக தலை​வர்​களுக்கு தெரி​யும். பாஜக​வால் அதி​முக​வுக்கு ஏற்​படும் பாதிப்பு குறித்து பழனிசாமி அறி​யாமல் இருக்​கிறார். அதி​முக - பாஜக...
 மத்​திய தொழிற்​சங்​கங்​களின் நாடு தழு​விய பொது வேலை நிறுத்​தத்​தின் ஒரு பகு​தி​யாக, பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் எழும்​பூர், சென்ட்​ரல், பெரம்​பூர் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் எஸ்​ஆர்​எம்​யு, டிஆர்​இ​யு, எஸ்​ஆர்​இஎஸ் உள்​ளிட்ட ரயில்வே தொழிற்​சங்​கத்​தினர் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தனி​யார்​மய​மாக்​கல், பெரு (கார்ப்​பரேட்) நிறு​வனங்​களுக்கு ஆதர​வான மத்​திய அரசின் கொள்​கைகளை கண்​டித்​து, மத்​திய தொழிற்​சங்​கங்​கள் சார்​பில், நாடு தழு​விய வேலை நிறுத்​தம் நேற்று நடை​பெற்​றது. இதன் ஒரு பகு​தி​யாக,...
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர்...
பராமரிப்​புப் பணி​கள் காரண​மாக மெரினா நீச்​சல் குளம் நாளை முதல் ஜூலை 31 வரை இயங்​காது. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநகராட்சி சார்​பில் மெரினா கடற்கரை​யில் நீச்​சல்குளம் பராமரிக்கப்​பட்டு வரு​கிறது. பொது​மக்​கள் கட்டண அடிப்​படை​யில் பயன்​படுத்த அனு​ம​திக்​கப்​பட்டு வரு​கின்​றனர். இந்த நீச்​சல் குளத்​தில் தண்​ணீர் சுத்​தி​கரிப்பு மையம் தங்​கு தடை​யின்றி இயங்க ஏது​வாக, 135 மீ குழாய் அமைத்​தல், 1.80 மீ. விட்​டம்...
 திருவாரூரில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக நேற்று பிற்பகல் திருவாரூர் வந்தார். காட்டூர் கலைஞர் கோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், பின்னர் அங்குள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, பவித்திர...