முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆருக்கு காட்பாடியில் ரூ.3 கோடியில் கோயில் கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் மும்மத அடையாளங்களுடன் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு ரூ.3 கோடி செலவில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
ராமச்சந்திரா அறக்கட்டளையின் நிர்வாகி டி.ஆர்.முரளி சார்பில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கோபுரங்கள் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோயிலுக்குள் ரூ.17 லட்சம் மதிப்பில் ஐம்பொன்னாலான எம்ஜிஆரின்...
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும் விழா நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.28.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா, கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூண், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம், கொளத்தூர் நவீன அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ரூ.4.15 கோடியில் புதிய பள்ளிக்...
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை: அகர்வால்ஸ் மருத்துவமனை ஏற்பாடு
admin - 0
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை பிராந்தியத் தலைவர் மருத்துவர் சவுந்தரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெண்கள் தான் சமூகத்தின் அடித்தளம்.
அவர்களுக்கு பேறு காலத்தின் போதும், மன அழுத்தம் ஏற்படும் போதும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை கவனிக்கவில்லை எனில், பார்வையில் தெளிவின்மை, இரட்டை பார்வை, பார்வைத் திறன் பாதிப்புகள் உள்ளிட்டவை உருவாகும். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளதால், சங்கிலித் தொடர் போல உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயரும்.
பெட்ரோலியம் சார்ந்த அனைத்து எண்ணெய் பொருட்களின் மீதும் இதன் தாக்கம் இருக்கும்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தும் போர் காரணமாக சிலிண்டர், பெட்ரோல் உள்ளிட்ட எந்த எரிபொருளுக்கும் தட்டுப்பாடு, இருக்காது என பாஜகவினர் பேசி வந்த...
மூத்த பத்திரிகையாளர் பிடிஐ ராமசாமி, சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் முன்னாள் மண்டல மேலாளரும், மூத்த பத்திரிகையாளருமான எஸ்.ராமசாமி (74), சென்னையில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
பத்திரிகையாளர் வட்டாரங்களில் ‘எஸ்.ஆர்’ என்று அழைக்கப்பட்ட இவர், 1978-ம் ஆண்டு பிடிஐ செய்தி நிறுவனத்தின் இணைந்து, 30 ஆண்டுகள் பணியாற்றியவர்.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அரசியல் நகர்வுகளை பதிவு செய்தவர். மறைந்த...
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கர்க் அதிவேக ஏசி மின்சார ரயில் மூலமாகசோதனை ஓட்டத்தை மேற்கொண்டார். இது வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் (மேம்பால ரயில் வழித்தடம்) தடத்தை பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கும் பணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, இத்தடத்தில் கடந்த ஆண்டு...
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ன் படி, மருத்துவர்களுக்கு உரிய காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
தீர்வு கிடைக்காத நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்...
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மருத்துவ உபகரணங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
admin - 0
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்கு, சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், ரூ.7.39 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்தும் விதமாக வாட்ஸ் அப் செயலியை மக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அத்துடன், ‘ஜெ.எம்.எம்.சி.’ என்ற மருத்துவ இதழை தொடங்கி வைத்ததுடன், ரூ.60 லட்சம்...
பணி நீக்கம் செய்யப்பட்ட அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்
admin - 0
அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்கள் தற்காலிக உதவி பேராசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெய்சன், ராஜ்குமார், கோசலை ஆகியோர், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், அண்ணா பல்கலை.யின் 13 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 3 மண்டல வளாகங்களில் 328 தற்காலிக உதவி பேராசிரியர்கள் 10,15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தோம். பணிநீட்டிப்பு கடந்த டிச.31-ல் முடிவடைந்த நிலையில் அதன்பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இதனால், நாங்களும் எங்கள் குடும்பத்தினரும்...
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என ட்விட்டரில் பதிவு வெளியிட்டது, திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து தெரிவித்ததாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வழக்குகளை விசாரித்த எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த 2024-ல் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர்...










