12 பெட்டிகளுடன் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் மேம்படுத்தப்பட்ட மெமு ரயில் சேவை தொடக்கம்!
admin - 0
மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 12 பெட்டிகளை கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்தடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு பயணிகள் சென்று திரும்ப வசதியாக, மெமு (மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில்கள் பயனுள்ளதாக இருக்கின்றன.
இந்த ரயில்கள் சென்னை ரயில்வே கோட்டத்தில் காட்பாடி - அரக்கோணம், சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர், திருத்தணி - சென்னை சென்ட்ரல், சென்னை - திருப்பதி, நெல்லூர் உட்பட...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்) மாற சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் போலீஸாரால் தாக்கப்பட்டதில் உயிர்இழந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ்,...
விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 26, 27 வார இறுதிவிடு முறை என்பதால் இன்றும், நாளையும் (ஜூலை 25, 26) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110...
ஆடி அமாவாசையை முன்னிட்டு, சென்னையில் கடற்கரை, கோயில் தெப்பக்குளம் உட்பட பல்வேறு நீர்நிலைகளில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். முன்னோர் வழிபாட்டுக்கு உகந்தநாளாக அமாவாசை கருதப்படுகிறது. அதிலும், ஆடி, புரட்டாசி (மகாளயம்), தை மாதங்களில் வரும் அமாவாசை நாள், கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.
ஆடி அமாவாசை நாளில் புனித நீராடி, முன்னோருக்கு எள் மற்றும் அரிசி மாவால் செய்யப்பட்ட பிண்டங்களை வைத்து தர்ப்பணம் செய்வது, அவர்களின் ஆசிகளைப் பெற்று...
தகாத உறவுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய், ஆண் நண்பருக்கு சாகும்வரை சிறை – வழக்கின் முழு விவரம்
admin - 0
குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்த விவரம் வருமாறு: குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(30). இவர் தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார். இவருக்கு அபிராமி(25) என்ற மனைவியும் அஜய்(7) என்ற...
2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு முரசறைகிறது. ஆனால், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்தத் தொகுதியான காங்கயத்தில் காங்கயம் காளைக்கு சிலை அமைக்கப்படும் என திமுக தலைவராக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2020 நவம்பர் 6-ல் திருப்பூர் வந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காங்கயம் காளைக்கு காங்கயம் நகரின் மையப்பகுதியில் சிலை அமைக்கப்படும்” என அறிவித்தார்....
ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக. அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக தலைமை, தான் நினைத்தபடி பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை என்று கண்டுபிடித்து அந்த மாவட்டச் செயலாளர்களை ட்ரில் வாங்கியது. தற்போது அடுத்த அதிரடியாக பூத் கமிட்டிகளின் செயல்பாடுகளை டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாக...
நுங்கம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேனில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், உத்தமர் காந்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ. தொலைவு வரை 3-வது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகள்...
பெண்களின் பாதுகாப்பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரை மூத்த அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி வரவேற்றார்.
அம்மனை தரிசித்துவிட்டு கோயிலுக்கு வெளிய வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார்....
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 16,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 31,000 கனஅடியாகவும், இரவு 18,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று 18,000 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு நேற்று மாலை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம்...










