அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை: தமிழக காங். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து
admin - 0
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி வரிகுறைப்பு மாபெரும் புரட்சி என்றும், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி மீதமாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் 4 வகையான உயர்ந்த வரிகளை விதித்து ரூ.55 லட்சம் கோடியை மக்களிடமிருந்து...
சிறுநீரக திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்தும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறுநீரகம் மற்றும் உடல் உறுப்புகள் திருட்டு தொடர்பாக...
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கறிக்கோழி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக நேற்றும் சோதனை மேற்கொண்டனர். உடுமலையில் செயல்பட்டு வரும் தனியார் கறிக்கோழி நிறுவனத்துக்கு பல மாநிலங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன.
கடந்த 23-ம் தேதி உடுமலையில் உள்ள அலுவலகம், தீவன உற்பத்தி ஆலை, கணபதிபாளையத்தில் உள்ள இல்லம் ஆகியவற்றில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வைத் தொடங்கினர். இந்நிலையில், 3-வது...
உள்ளடி வேலை செஞ்சா ஓரங்கட்டிருவோம் பாத்துக்கோங்க..! – ஏலகிரியில் எ.வ.வேலு அடித்த எச்சரிக்கை மணி!
admin - 0
“உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினைகள மனசுல வச்சிக்கிட்டு ஒழுங்கா தேர்தல் வேலை பார்க்காம உள்குத்து வேலை செஞ்சு அதனால தொகுதி கைவிட்டுப் போச்சுன்னா உங்க யாருக்கும் பதவி மிஞ்சாது பாத்துக்கோங்க” ஏலகிரி மலையில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தான் கழக கண்மணிகளுக்கு இப்படி கண்டிப்பு மணி அடித்திருக்கிறார்.
‘வெல்வோம் 200... படைப்போம் வரலாறு’ என சூளுரைத்துக் கிளம்பி இருக்கும் திமுக, தேர்தல் ஓட்டப் பந்தயத்தில் மற்ற கட்சிகளைவிட...
போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றியதாக திமுக ஆட்சியை கண்டித்து சட்டப்பேரவை தொகுதிவாரியாக 2 மாதம் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்போவதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் தமிழக பாஜக செயலாளர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்களை எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல், மீண்டும் கவர்ச்சிகரமான போலி வாக்குறுதிகள், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி...
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த 2006-11 திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, 2007-09 காலகட்டத்தில் வருமானத்துக்குஅதிகமாக ரூ.1.40 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக துரைமுருகன், அவரது மனைவி...
திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியி்ல் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியில் புதை சாக்கடை குழாயின் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், அடைப்பை அப்புறப்படுத்துவதற்காக மாநகராட்சியில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களான கள்ளக்குறிச்சி...
துறையூர் அருகே முதல்வர் திறந்து வைத்த ஒரே ஆண்டில் அரசுப் பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
admin - 0
துறையூர் அருகே அரசுப் பள்ளியில் முதல்வர் திறந்து வைத்த ஒரே ஆண்டில் கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து இளைநிலைப் பொறியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 34 பேர் படித்து வருகின்றனர்.
2 வகுப்பறை கொண்ட கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதனிடையே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்...
நெல்லையில் 1,100 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி வழக்கு: பள்ளிவாசலின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
admin - 0
நெல்லையில் 1712-ம் ஆண்டில் அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட செப்பு பட்டயம் அடிப்படையில் 1,100 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என பள்ளி வாசல் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. செப்பு பட்டயம் அடிப்படையில் 2.34 ஏக்கர் நிலம் மட்டுமே பள்ளிவாசலுக்கு சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெல்லையில் 1,100 ஏக்கர் நிலத்துக்கு கண்டியப்பேரி கான்மியா பள்ளிவாசல் உரிமை கோரிய வழக்கில் பள்ளிவாசல் முத்தவல்லிக்கு...
திமுக பொதுக்கூட்டம் நடந்த சாலையில் ஆம்புலன்ஸை விட வேண்டாம் என பேசிய நாகர்கோவில் மேயர்: வீடியோவால் சர்ச்சை
admin - 0
நாகர்கோவிலில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் அமர்வதற்கு சாலையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில், அந்த வழியாக ஆம்புலன்ஸை அனுமதிக்க வேண்டாம் என, மேடையில் மேயர் மகேஷ் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகே கடந்த 20-ம் தேதி மாலை ‘ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.
கூட்டம் நடைபெற்ற அண்ணா விளையாட்டரங்கம் முன்னால் போக்குவரத்து...










