Google search engine
தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் உள்ள காலி இடங்​களில், பள்ளி மேலாண்​மைக் குழு மூலம் நியமிக்​கப்​பட்ட தற்​காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வரு​கின்​றனர். குறிப்​பாக, பொதுத்​தேர்வு நடை​பெறும் 10-ம் வகுப்பு மற்​றும் பிளஸ்-2 வகுப்​பு​களுக்கு கூடு​தல் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டு, ஆசிரியர்கள் நியமிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், டிஆர்பி மூலம் தேர்வு செய்​யப்​பட்ட முது​நிலை ஆசிரியர்கள், உடற்​கல்வி இயக்​குநர் மற்​றும் கணினி பயிற்​றுநர்​கள் என மொத்​தம் 1,996 பேருக்கு முதல்​வர் ஸ்டா​லின் பணி நியமன ஆணை​களை வழங்​கி,...
சென்னை சென்ட்​ரல் - கூடூர் மார்க்​கத்​தில் சூலூர்​பேட்டை யார்​டில் பொறி​யியல் பணி காரண​மாக, புறநகர் மின்​சார ரயில் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி, சென்னை சென்ட்​ரல் - சூலூர்​பேட்​டைக்கு வரும் 19, 21 ஆகிய தேதி​களில் நண்​பகல் 12.10 மணிக்கு புறப்​படும் மின்​சார ரயில், எளாவூர்​-சூலூர்​பேட்டை இடையே பகுதி ரத்து செய்​யப்​படு​கிறது. சூலூர்​பேட்டை - சென்னை சென்ட்​ரலுக்கு மேற்​கண்ட நாட்​களில் மதி​யம் 1.15 மணிக்கு புறப்பட வேண்​டிய மின்​சார ரயில், சூலூர்​பேட்டை...
இம்​மாத இறு​திக்​குள் சென்​னை​யில் மேலும் 245 மின்​சார பேருந்துகள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​படும் என மாநகர் போக்​கு​வரத்​துக் கழக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்​னை​யில் சுற்​றுச்​சூழல் மாசு​பாட்டை குறைக்க, டீசல் பேருந்​துகளுக்கு பதிலாக மின்​சார பேருந்​துகளைப் பயன்​படுத்த தமிழக அரசு முடிவு செய்​தது. அதன்​படி, கடந்த ஜூன் மாதம் சென்​னை​யில் 120 மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவை தொடங்​கப்​பட்​டது. வியாசர்​பாடி பணிமனை​யில் இருந்து தொடங்​கப்​பட்ட இந்த பேருந்து சேவை, தொடர்ந்து பெரும்​பாக்​கம், பூந்​தமல்லி ஆகிய...
‘பங்கு வேண்டும்’ என படைதிரட்டும் கட்சியின் ‘வெல்த்தான’ மாநில முக்கியஸ்தரும் அந்தக் கட்சியின் தேசிய முக்கியஸ்தரும் ஒரே சமூகத்தினர் என்பதால் பலரும் பல சந்தேகங்களைக் கிளப்புகிறார் களாம். சூரியக் கட்சி தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் ‘வெல்த்’ பார்ட்டி, இந்தக் கூட்டணி தொடர்ந்தால் தான் நமக்கு பல விதத்திலும் நல்லது என நினைக்கிறாராம். ஆனால், சூரியக் கட்சி செல்வாக்கை வைத்து ‘வெல்த்’ பார்ட்டி தனது வெல்த்தை பெருக்கிக் கொள்வது சொந்தக் கட்சிக்குள்...
நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற இஸ்ரோ முன்​னாள் தலை​வரும், விண்வெளி ஆணை​யத்​தின் உறுப்​பினரு​மான ஏ.எஸ்​. கிரன்​கு​மார் பேசி​ய​தாவது: நம் நாட்​டில் விண்வெளி தொழில்​நுட்​பத்தை ஒளிபரப்​பு, தொலைத்​தொடர்​பு, வானிலை கண்​காணிப்​பு, திசை அறிதல், வியூகப் பயன்​பாடு உட்​பட்ட தேவை​களுக்கு தொடக்க காலத்​தில் பயன்​படுத்​தினோம். அதனைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மூலம் பல்​வேறு துறை​களுக்கு தகவல் அளித்​து, பயிர் விளைச்​சல், வளர்ச்சி ஆகிய​வற்றை கண்​காணிக்க இந்த தொழில் நுட்​பம் பயன்​படுத்​தப்​பட்​டது. அண்மைக்...
தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​துக்கு வந்த வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயி​ரிழந்​தார். சேலம் சீல​நாயக்​கன்​பட்டி பைபாஸ் பகு​தி​யில் உள்ள தாள ​முத்து நடராஜன் மைதானத்​தில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்​தது. இந்​தக் கூட்​டத்​தில் பங்​கேற்க சீல​நாயக்​கன்​பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த, வடமாநில இளைஞர் சிராஜ் (37) வந்​திருந்​தார். அவர் கடந்த 20 ஆண்​டு​ களாக மனை​வி, மகன், மகளு​டன் சேலத்தில்...
15 ஆண்​டு​களுக்கு முன்பு நடந்த கொலை வழக்​கில் 14 பேரை விடு​தலை செய்து கீழமை நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், தற்​போது உயிருடன் உள்ள 9 பேரை​யும் குற்​ற​வாளி​களாக அறி​வித்து உத்​தர​விட்​டுள்​ளது. திரு​வான்​மியூர் ரங்​க​நாத​புரத்​தைச் சேர்ந்த ரவி என்​பவரைக் கொலை செய்த வழக்​கில் தொடர்​புடைய சின்​னையா என்ற ஏழு​மலையை ஒரு கும்​பல் கடந்த 2010 ஜூன் 14 அன்று அவரது வீட்​டின் முன்​பாக வெட்டி படுகொலை...
லஞ்​சப் பணம் பெற்​ற​தாக எழுந்த குற்​றச்​சாட்​டில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்​டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்​தினர். சென்னை காவல் துறை​யில் உள்ள பாலியல் தடுப்​புப் பிரிவு இன்​ஸ்​பெக்​ட​ராக இருப்​பவர் ராஜலட்​சுமி. இவர் குடும்​பத்​தோடு சென்னை திரு​மங்​கலம், வெல்​கம் காலனி​யில் வசித்து வரு​கிறார். நேற்று காலை 6 மணி​யள​வில் இவரது வீட்​டுக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீ​ஸார் சென்று திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். சுமார் 4 மணி நேர சோதனைக்​குப் பிறகு...
அண்ணா நகர் பகுதியில் மிஸ்​டர் ஹேர் என்ற பெயரில் சிகை சீரமைப்பு சிகிச்சை மையம் இயங்கி வந்​தது. அங்​கு, போலி மருத்துவர்கள் மூலம் முடி மாற்று சிகிச்​சைகள் மேற்​கொள்​வது கண்​டறியப்​பட்​ட​தால், 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அந்த சிகிச்சை மையத்​துக்கு சுகா​தா​ரத் ​துறை அதி​காரி​கள் சீல் வைத்​தனர். படித்த இளைஞர்​களும், பெண்​களுமே இத்​தகைய மோசடிகளால் அதி​கம் பாதிக்​கப்​படு​வ​தால், தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) வழி​காட்​டு​தல்​களை மேற்​கோள் காட்டி மாநில மருத்​துவ...
பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டம், `தாய்மை செயலி' திட்டம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் ரூ.8.07 கோடியில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கிய அமைச்சர், தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், பேறுகால மற்றும் குழந்தை...