“தவெகவுக்கு பெருகும் மகளிர் ஆதரவே திமுக ரூ.2000 கோடைகால சிறப்புத் தொகை வழங்கக் காரணம்” – விஜய்
admin - 0
“கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 வழங்க, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்துக்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே. திமுகவை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13-ம் தேதி வரவு...
தேர்தல் நேரத்தில் ரூ.5000 வரவு வைக்கும் திமுகவின் ‘பேட்ச் ஒர்க்’ வேலையை மகளிர் நம்பமாட்டார்கள்: பழனிசாமி
admin - 0
“சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது தேர்தல் நேரத்து பணம் வரவு வைக்கும் இந்த ‘Patchwork’ வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?” என மகளிர் உரிமைத் தொகையோடு கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ.2000 சேர்த்து மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல்...
டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து விவகாரத்தில் எதிர்குரல் கொடுக்காமல், கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு தாலி கட்டிய மனைவி போல் ஆகிவிட்டன என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
‘விடியா ஆட்சி, உங்கள் வீட்டு பில்லே சாட்சி’ என்ற தலைப்பில், அதிமுக சார்பில் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. இது தொடர்பான செயலி மூலம் வீடுகள்தோறும் கணக்கெடுக்கும் பணியை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்...
“குலவிளக்கு திட்டம் மூலம் மகளிருக்கு ரூ.2000 தருவோம் என அதிமுக தந்த தேர்தல் வாக்குறுதியால், திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் மகளிருக்கு ரூ.5000 கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என திமுக நினைக்கிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 உரிமைத்தொகையுடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு...
“புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க தயார்” – பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
admin - 0
புதுவை சட்டப்பேரவையில் நேற்று, அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நேற்று நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா குறுக்கிட்டு, “புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை.
‘இரட்டை இன்ஜின்’ அரசு என்று கூறினீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீர்கள்....
“அந்தத் தொகுதிகளை நமக்கு கேட்க வேண்டும்” – திருச்சி அமைச்சர்களுக்கு திகில் கொடுக்கும் தோழர்கள்
admin - 0
திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்போம் என்று இரண்டு கம்யூனிஸ்ட்களும் ஒரே குரலாக ஒலித்திருக்கும் நிலையில் அடுத்த அதிரடியாக, அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் தொகுதிகளை தங்களுக்குக் கேட்க வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறார்கள் தில்லான தோழர்கள்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளை இம்முறை திமுக-விடம் கேட்டுப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி...
சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கு குலுக்கல் முறையில் தேர்வு இன்று (பிப்.12) நடைபெறுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கான குலுக்கல் முறையிலான தேர்வு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.
ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால் வசந்தகுமார் மேற்பார்வையில் குலுக்கல் நடைபெறுகிறது. சென்னை மெரினா கடற்கரை 4...
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி மற்றும் அவரது குழுவினர் முதல்கட்ட ஆய்வை நேற்று தொடங்கினர். கட்டுமானப் பணிகள், மின்சாரம், தண்டவாளம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
சென்னையில் 2-ம் கட்டமாக, 3 வழித்தடங்களில், 116.1 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. இதில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தின் ஒருபகுதியாக, பூந்தமல்லி - வடபழனி...
பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் குற்றச் செயல்களை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு புதன்கிழமையும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை காவல் ஆணையர் அருண் நேரில் பெற்று வருகிறார்.
அந்த வகையில், நேற்று 28 பேரிடம் புகார் மனுக்களை அவர்...
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் நேற்று 2-வது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற 450-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திராவில் வழங்குவதை போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகம்...




