கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டை ஒட்டி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடும் இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், தலைவர் கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: இந்தியாவின்...
சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை: முதல்வருக்கு வாரிசுகள் கூட்டமைப்பு கோரிக்கை
admin - 0
சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த கூட்டமைப்பின் தலைவர் நா.விஜயராகவன் அனுப்பி யுள்ள மனுவை, பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் பரிந்து ரைத்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை...
அரசு உதவி வழக்கறிஞர் பணி தேர்வு முறையில் மாற்றம்: கட்டாய தமிழ் மொழி தாள் தேர்வு இடம்பெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
admin - 0
அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் (கிரேடு-2) தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. புதிய முறையில் முதல்நிலைத் தேர்வில் கூடுதலாக பொது அறிவுத் தாள் தேர்வும், மெயின் தேர்வில் கூடுதலாக கட்டாய தமிழ் மொழி தாள் தேர்வும் இடம்பெறுகின்றன.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பொதுப்பணியில் உள்ள அரசு உதவி வழக்கறிஞர் (கிரேடு-2) பதவிக்கான புதிய தேர்வு திட்டம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக...
தொடக்க கல்வித் துறையில் பணியாளர் நிர்ணயம்: சரண் செய்த பணியிடங்களை பதிவு செய்யக்கூடாது என உத்தரவு
admin - 0
அரசுப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயத்தின்போது சரண் செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் பதிவு செய்யக்கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டில் (2024-25) கடந்த ஆகஸ்ட்1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில்உள்ள மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி,...
தமிழகத்தில் உள்ள 25 ஆயிரம் தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, மென்பொருள் உருவாக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் உயர் அழுத்தப் பிரிவில் இடம்பெறும் 11 ஆயிரம் தொழிற்சாலைகளில் மட்டும் ஆளில்லாமல் கணக்கெடுக்கும் தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டரில் மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொலைத் தொடர்பு வசதியுடன் அலுவலக சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது. மின்கணக்கெடுப்பு தேதி வந்ததும் தானாகவே...
தமிழகம் வரும் முதலீடுகளால் அதிக வேலைவாய்ப்பு: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நம்பிக்கை
admin - 0
தமிழகத்துக்கு வரவுள்ள புதிய முதலீடுகளால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) சார்பில் தமிழகத்தில் தொழில்துறையின் கீழ் குறுந்தொழில் முனைவோரை வலுப்படுத்துவது தொடர்பாக கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் வத்ஸ் ராம் தலைமை தாங்கினார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிஐஐயின் ‘புதிய பயணம் வளர்ச்சியை நோக்கி’ எனும் திட்டத்தை...
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா ஆக. 17-ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி, பாஜக மாநில தலைவர்அண்ணாமலை உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100...
என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் 6-வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்: சிறந்த மாநில பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலை. தேர்வு
admin - 0
தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், சென்னை ஐஐடி, அண்ணாபல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் என்ற அளவிலும், பல்கலைக்கழகம், பொறியியல், நிர்வாகம், சட்டம், மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட 16 பாடப்பிரிவுகள் அளவிலும் மத்திய கல்விஅமைச்சகம் வெளியிட்டு வருகிறது.கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி, உருவாக்கப்படும் பட்டதாரிகளின் நிலை போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக்...
நகராட்சி தூய்மை பணியாளர் மகள் நகராட்சி ஆணையரானார்: பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
admin - 0
சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர்களுக்கும் பணி நியமனஆணைகளை வழங்கினார்.
அதன்படி நகராட்சி ஆணையருக்கான பணி நியமன ஆணை பெற்ற துர்கா என்பவர் கூறும்போது, ‘‘தமிழக அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி படித்தாலே நாம் நல்ல நிலைக்கு உயரலாம். நான்...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைச்சர் தா.மோ.அன்பரசன், “நடிகர்களை திரைப்படங்களில் பார்க்கலாம். அத்துடன் வந்துவிட வேண்டும். நடிகர்களுக்கு அறிவுஇருக்குமா என்றால் இருக்காது. கட்சி நடத்துவது என்றால் சாதாரணமா?” என்று பேசியுள்ளார்.அவர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை கூட அவ்வாறு சுட்டிக் காட்டியிருக்கலாம். அதை ஏன் தவெக தலைவர் விஜயை கூறியதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நடிகர்களுக்கு அறிவில்லை என்றால் சரத்குமார், ராதிகா, குஷ்பு,...










