நாட்டின் தலைவராக சிந்தித்து செயல்பட்டதால் இந்தியா போற்றும் தலைவராக உயர்ந்தார் கருணாநிதி: நாணய வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
admin - 0
ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக, எப்போதும் சிந்தித்து செயல்பட்டதால்தான் அகில இந்தியாவும் போற்றும் தலைவராக கருணாநிதி உயர்ந்து நிற்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டார். இவ்விழாவுக்கு தலைமையேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக...
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்யாத பெண் உதவி ஆய்வாளர் ஆயுத படைக்கு மாற்றம்
admin - 0
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 23 வயது இளம் பெண் ஒருவர், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு...
முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்- சாட்டை துரைமுருகன் ஆகியோர் பேசிய ஆடியோ வெளியானது.
அதில், கட்சி நிர்வாகிகளை சீமான் விமர்சித்துப் பேசியது சர்ச்சையானது. தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், திருச்சி எஸ்.பி. வருண்குமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மறைமுகமாக விமர்சித்துப் பேசினர்.இதற்கு...
ககன்யான் திட்டத்துக்கு முன்பு ஆளில்லா விண்கலத்தை டிசம்பரில் விண்ணுக்கு அனுப்பி சோதனை: இஸ்ரோ தலைவர் தகவல்
admin - 0
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா விண்கலம் டிசம்பரில் விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர்,ஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியதாவது:எஸ்எஸ்எல்வி ராக்கெட் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இது இனிமேல் வர்த்தக ரீதியான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த ராக்கெட் தொழில்நுட்பம் பரிமாற்றம் குறித்து பல நிறுவனங்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் தகுதியான...
மின்கட்டண உயர்வால், மின்வாரியத்துக்கு மானியச் செலவு அதிகரித்துள்ளதால், அதை ஈடுசெய்ய கூடுதலாக ரூ.519 கோடியை வழங்குமாறு தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.இதன்படி, இந்த நிதியாண்டுக்கு ரூ.15,332 கோடி மானியம் வழங்க அரசுக்கு மின்சார...
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 18 அரசு மருத்துவமனைகள், 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று...
கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்து சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி ஒருவரை மாநகராட்சி தன்னார்வலரான சஞ்சோய் ராய் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை...
அரசு சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் தெருமுனை பிரச்சாரம்: திருச்சி திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
admin - 0
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, செந்தில், துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு...
“பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து ரயில்வே கொள்கை வகுக்கும் மத்திய அரசு” – டி.ஆர்.பாலு சாடல்
admin - 0
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த ஒன்றிய அரசு, இன்றைக்கு ரயில்வே திட்டங்களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. இதயமே இல்லாமல் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போட்டிருக்கிறார்கள் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நாட்டின் 80 சதவிகித மக்களை மறந்துவிட்டு, பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து, ரயில்வே கொள்கை வகுத்து வருகிறது ஒன்றிய அரசு” என்று அவர் சாடியுள்ளர்.இது...
விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையிலும், நாளை (சனிக்கிழமை) புதுச்சேரியிலும் விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 17-ம் தேதியை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டும் அவரது 62-வது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள...










