டெல்லி முதல்வராக ஆதிஷி மர்லேனா சிங் நேற்று முறைப்படி பொறுப்பேற்றார். அவர். முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டு, அருகில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில்இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். கடந்த 17-ம் தேதிஅவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குபதிலாக கடந்த 21-ம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி மர்லேனா...
உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் இன்று (செப்.24) பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமைச்சரவை மாற்றம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்தார்.வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எதிர்க்கட்சிகள்...
பெண்கள் மீதான வன்முறைகளை களைய பள்ளியில் இருந்து பாலின சமத்துவத்தை தொடங்க வேண்டும்: முன்னாள் நீதிபதி சந்துரு
admin - 0
பெண்கள் மீதான வன்முறைகளைக் களைய, பாலின சமத்துவத்தை பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறினார்.
மனித உரிமைப் போராளி பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளை, டாக்டர் கோபிகர் அறக்கட்டளை, இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழுமம், சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் ஹோமியோபதி ஆகியவை சார்பில், மனித உரிமைப் போராளி பி.வி.பக்தவச்சலத்தின் 17-ம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் "பெண்கள் மீதானதொடர் வன்முறை - வேரும்...
தமிழகத்தில் அண்மைக்காலமாக என்கவுன்ட்டர் அதிகரித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில். ‘கந்து வட்டிஒழிப்பு’ மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இங்குள்ள மக்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும், நிதி பற்றாக்குறைக்காகவும் சில தனியார்நிறுவனங்களிடம் கடன் பெறுகின்றனர்....
உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தும் வகையில், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை பெற, இந்திய தேர்தல் ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளித்து மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்பிரிக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து,மாற்ற மாவட்டங்களில் உள்ள ஊரகஉள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த ஊரகஉள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம், இந்தாண்டு...
கண்ணப்பர் திடலில் வசிக்கும் 114 வீடற்றோர் குடும்பங்களுக்கு இன்று வீடு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் உதயநிதி வழங்குகிறார்
admin - 0
கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக வசித்து வரும் 114 வீடற்றோர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் உதயநிதி இன்று வழங்குகிறார்.
சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்து வந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிக்காக அகற்றப்பட்டன.
இக்குடும்பங்கள் கண்ணப்பர் திடல் பகுதியில் அப்போது தங்க வைக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை, அடிப்படை வசதிகள் இன்றி அங்கு...
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில்,...
சென்னையில் நடைபெறும் இந்தியா - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரைபிசிசிஐ உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தலைமை தாங்கினார். அப்போது செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: வங்கதேச மக்களை பாகிஸ்தான் கொடுமைப்படுத்தியபோது, இந்திய ராணுவம் அங்குசென்று வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கிக்கொடுத்தது. அப்போது...
ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு
admin - 0
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை மிரட்டும் வகையில் பேசியவர்கள் மீது பாஜக தலைமையோ, பிரதமர் மோடியோ உரிய நடவடிக்கை எடுக்காததற்கு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகிலஇந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ்...
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை நடந்தது.
நேற்று காலை சென்னை வந்த பினராயி விஜயன், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு இசிஜி, எக்கோ உள்ளிட்ட இதயம் தொடர்பான பரிசோதனைகள், ரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. பரிசோதனையில், அவரது உடல்நலம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்போலோவில் இருந்து அவர் நேற்றுமதியம் புறப்பட்டு சென்றார். சிலஆண்டுகளுக்கு முன்பு சென்னைஅப்போலோ மருத்துவமனையில்...










